Bigrock Hosting Complete Review in Tamil

Bigrock Hosting

இந்நிறுவனம் இந்தியாவில் 2010 ஆம்  ஆண்டு தொடங்கப்பட்டது.அதன் பிறகு தனது சிறந்த வெப்  ஹோஸ்டிங்  Service ஆல் 4.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது .

இந்நிறுவனத்தில் 2700 ஊழியர்கள்   வேலை செய்கின்றனர் மேலும் இது 6 மில்லியனுக்கு   அதிகமான வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்துள்ளது .

இது இந்தியாவில் இருக்கக்கூடிய சிறந்த வெப் ஹோஸ்ட் மற்றும் Domain Registration நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

Bigrock Hosting வடியாளர்களை ஈர்க்க ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதை மற்ற வெப் ஹோஸ்ட்களிடையே ஒப்பிடும் போது தனித்துவமானது.

Server Up Time

உங்கள் வலைத்தளத்தை நீங்கள் Big Rock ஹோஸ்டிங்கில் ஹோஸ்ட் செய்த பிறகு அது Online இல் Live விற்கு வந்துவிடும்.

அதன் பிறகு உங்கள் வலைத்தளம் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள Server இல் திடீர் என்று ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கலால் உங்கள் வலைத்தளம் Online இல் செயல்படாது.

அந்த நேரத்தில் உங்கள் வலைத்தளத்திற்கு வர கூடிய பார்வையாளர்கள் நீங்கள் வழங்கக்கூடிய Service ஐ அணுகமுடியாமல் சென்று விடுவார்கள்.

இதனால் உங்களுக்கு பணம் இழப்பு நேரிடவும் மற்றும் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய வடிக்கையாளர்களை நீங்கள் இழக்க நேரிடும்.

மேலும் புதிதாக வரக்கூடிய பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளம் Online இல் Live வில் இல்லையென்று நினைத்து சென்று விடுவார்கள் .இதனால் உங்களுக்கு போக்குவரத்து இழப்பு நேரிடும்.

எனவே தான் அனைத்து ஹோஸ்டிங் நிறுவனங்களும் வலைத்தள இயக்க நேரத்தை 99.99% தருவதாக உத்திரவாதம் அளிப்பதாக விளம்பரம் செய்கின்றன.

அதே போலத்தான் Big Rock ஹோஸ்டிங் நிறுவனமும் உங்கள் வலைத்தளத்தை 99.99% இயக்க நேரத்தில் செயல்படுத்துவதாக உத்தரவாதம் அளிக்கிறது .

ஆனால் இவர்கள் வழங்கக்கூடிய வலைத்தள இயக்க நேரத்தை சோதித்து பார்த்ததில் 99.89% வழங்குகின்றது .

அப்படியென்றால் Big Rock ஹோஸ்டிங்கில் உங்கள் வலைத்தளம் ஹோஸ்ட் செய்யப்பபட்டுள்ள Server ஒரு மாதத்திற்கு 1மணி நேரம் செயல்படுவதில்லை .

இதனால் ஒரு மாதம் மற்றும் வருடத்திற்கு உங்கள் வலைத்தளத்தில் இழக்ககூடிய வருமானம் மற்றும் போக்குவரத்து என்னவென்று நீங்களே Calculate செய்து கொள்ளுங்கள் .

Page Loading Speed

Page Loding Speed  என்பது வலைத்தள இயக்க நேரம் போலவே முக்கியமானது.

ஏனென்றால் உங்கள் வலைத்தளத்திற்கு ஒரே நேரத்தில் அதிகமான பார்வையாளர்கள் வரும்போது வலைத்தளத்தில் இருக்கக்கூடிய பக்கங்கள் Loading ஆவதற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய நேரத்தைத்தான் Page Loding என்கிறோம்.

உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Pageகளை பார்வையாளர்கள் Click செய்யும் போது உடனே Open ஆகாமல் காலதாமதம் ஏற்பட்டால் அவர்கள் எரிச்சல் அடைந்து வலைத்தளத்தில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள் .

இதனால் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய போக்குவரத்தை நீங்கள் இழக்க நேரிடும் .

ஆனால் Big Rock ஹோஸ்டிங் பொருத்தவரை Page Loading 440 எம்.எஸ் வேகத்தில் செயல்படுகின்றது.

எனவே Big Rock மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை விட போக்குவரத்தை சிறப்பாக கையாளுகிறது.

Customer Support

புதிதாக வெப்  ஹோஸ்டிங் வாங்கும்போது வலைத்தள இயக்க நேரம் மற்றும் Page Loading Speed க்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போலத்தான் வாடிக்கையாளர் ஆதரவு எப்படி வழங்கப்படுகின்றது என்பதிலும் நீங்கள் கவனித்து ஒரு ஹோஸ்டிங் வாங்க வேண்டும்.

நீங்கள் இப்போது Big Rock Hosting இல் உங்கள் வலைத்தளத்திற்கான ஹோஸ்டிங் பிளான்களை வாங்கிய பிறகு அதில் உங்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பாக ஏற்படக்கூடிய சந்தேகங்கள் மற்றும் வலைதள பிரச்சனைகளை சரி செய்வதற்கு Big Rock வாடிக்கையாளர் ஆதரவு முக்கியமான ஒன்றாகும் .

Big Rock Email,Live Chat மற்றும் Ticket போன்ற பல்வேறு வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகின்றது .

நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் என்றால் உங்களுக்கு கூடுதலாக Phone Call மூலமாக வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகின்றது .

இது தினமும் 24 மணி நேரம் வருடத்தில் 365 நாட்களும் வாடிக்கையாளர் ஆதரவை அளிக்கிறது .

எனவே உங்கள் வலைத்தள தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் Big Rock சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகின்றது என்று பலரின் கருத்தாக உள்ளது .

Shared Hosting Plan

Linux மற்றும் Windows ஆகிய இரண்டு ஹோஸ்டிங் Service களையும் வழங்கக்கூடிய ஒரு சில Share ஹோஸ்டிங்கில் Bigrock ஒன்றாகும்.

பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் Linux ஹோஸ்டிங்கை மட்டுமே வழங்குகின்றன, ஏனெனில் Linux ஹோஸ்டிங் WordPress ,Drupal போன்ற பிரபலமான CMS வலைத்தளங்களை ஆதரிக்கின்றது.

மேலும் Linux ஹோஸ்டிங்கின் அனைத்து பிளானிலும் CPanel வழங்கப்படுகின்றது .

உங்கள் வலைத்தளம் ASP அல்லது .NET இல் உருவாக்கப்பட்டு MS-SQL Database உடன் இணைக்கப்பபட்டு இருந்தால், Windows ஹோஸ்டிங் Service தேவைப்படும்.

Windows ஹோஸ்டிங் பிளான்கள் Linux ஹோஸ்டிங் பிளானை விட சற்று விலை அதிகம் , ஆனால் சிறப்பு அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

Shared Linux Hosting Plan

Shared Linux Hosting Plan

நான்கு விதமான Shared Linux ஹோஸ்டிங் பிளான்கள் உள்ளன, அவை

Starter Linux Plan(ரூ.139/1 மாதம் /5 வருடம்)

இதில் ஒருவலைத்தளம் ஹோஸ்ட் செய்து கொள்ளலாம் மற்றும் 20 GB Diskspace ,100 File Transfer ,5 Email Accounts மற்றும் இலவச SSL சான்றிதழ் வழங்கப்படுகின்றது .

Advanced Linux Plan(ரூ.199/1 மாதம் /5 வருடம்)

அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts மற்றும் இலவச SSL சான்றிதழ் இதில் வழங்கப்படுகின்றது மற்றும் ஒரு வலைத்தளம் இங்கு ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

Pro Linux Plan(ரூ.389/1 மாதம் /5 வருடம்)

இதிலும் Advanced Linux Plan போலவே அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts மற்றும் இலவச SSL சான்றிதழ் வழங்கப்படுகின்றது ஆனால் நீங்கள் இங்கு அன்லிமிடெட் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ள முடியும்.

Shared Windows Hosting Plan

Shared Windows Hosting Plan

நான்கு விதமான Shared Windows ஹோஸ்டிங் பிளான்கள் உள்ளன, அவை

Essential(ரூ.59/1 மாதம் /10 வருடம் )

Essential Windows ஹோஸ்டிங் பிளான் பொறுத்தவரை 20 GB Diskspace ,100GB File Transfer,இலவச SSL சான்றிதழ் மற்றும் 5 Email Accounts வழங்கப்படுகின்றது

Premium(ரூ.399/1 மாதம் /3 வருடம் )

இந்த பிளான் பொறுத்தவரை ஒரு வலைத்தளம் இதில் ஹோஸ்ட் செய்து கொள்ளலாம் மற்றும்  அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts, இலவச SSL சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றது.

Business(ரூ.499/1 மாதம் /3 வருடம் )

Premium ஹோஸ்டிங் பிளான் போலவே Business ஹோஸ்டிங்  பிளானில் அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts, இலவச SSL சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றது.மேலும் நீங்கள் ஐந்து வலைத்தளத்தை இதில் ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

Pro(ரூ.599/1 மாதம் /3 வருடம் )

Premium மற்றும் Business ஹோஸ்டிங் பிளான்கள் போலவே Pro ஹோஸ்டிங்  பிளானில் அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts, இலவச SSL சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றது.இதில் நீங்கள் பத்து வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

Cloud Hosting Linux Plan(ரூ.579/1 மாதம் /5 வருடம்)

இதிலும் Pro Linux Plan போலவே அன்லிமிடெட் Diskspace ,File Transfer,Email Accounts மற்றும் இலவச SSL சான்றிதழ் மேலும்4GB RAM,2x Faster Load Time மற்றும் 4x Scalable Resources வழங்கப்படுகின்றது..நீங்கள் இங்கு அன்லிமிடெட் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ள முடியும்.

Reseller Hosting

Shared ஹோஸ்டிங்கைப் போலவே, BigRock Reseller ஹோஸ்டிங்கும் Linux மற்றும் Windows ஆகிய இரண்டு ஹோஸ்டிங் Service களையும் வழங்குகின்றது.

இந்தத் பிளான்கள் ஹோஸ்டிங் Serverகளை மற்றவர்களுக்கு விற்க உங்களை அனுமதிக்கின்றது

LINUX RESELLER HOSTING

ஐந்து விதமான Reseller Windows ஹோஸ்டிங் பிளான்கள் உள்ளன, அவை

LINUX RESELLER Hosting

BEGINNER (ரூ.1,999/1 மாதம்)

BEGINNER ஹோஸ்டிங்  பிளானில் 50GB Diskspace ,500 GB File Transfer,15 CPanel Accounts ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது .

மேலும் அன்லிமிடெட் வலைத்தளங்களை நீங்கள் ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

ESSENTIAL(ரூ.2,099/1 மாதம்)

ESSENTIAL LINUX RESELLER ஹோஸ்டிங்  பிளானில் நீங்கள் அன்லிமிடெட் வலைத்தளங்களை நீங்கள் ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

மேலும் 50GB Diskspace,500 GB File Transfer,60 CPanel Accounts ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது .

ECONOM(ரூ.2,399/1 மாதம்)

ECONOM ஹோஸ்டிங் பிளானில் 80 GB Diskspace ,700GB File Transfer ,250 Cpanel Accounts ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது .

மேலும் அன்லிமிடெட் வலைத்தளங்களை நீங்கள் ஹோஸ்ட் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

DELUXE (ரூ.3,199/1 மாதம்)

இந்த DELUXE பிளானிலும் நீங்கள் அன்லிமிடெட் வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் 150GB Diskspace ,1000 GB File Transfer, 300 CPanel Accounts ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது.

PREMIUM(ரூ.4,399/1 மாதம்)

இந்த Premium ஹோஸ்டிங் பிளானில் 160GB Diskspace ,1200 GB File Transfer, 300 CPanel Accounts ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது.

மேலே கூறிய அனைத்து Reseller Hosting பிளானை போலவே இதிலும் நீங்கள் அன்லிமிடெட் வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.

WINDOWS RESELLER HOSTING

Windows RESELLER Hosting

மூன்று விதமான Reseller Windows ஹோஸ்டிங் பிளான்கள் உள்ளன, அவை

ECONOMY(ரூ.2,099/1 மாதம்)

ECONOMY ஹோஸ்டிங் பிளானில் 50GB Disk Storage ,200 GB File Transfer ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது.

மேலும் நீங்கள் அன்லிமிடெட் வலைத்தளத்தை ஹோஸ் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது .

DELUXE(ரூ.2,599/1 மாதம்)

DELUXE ஹோஸ்டிங் பிளானில் 100GB Disk Storage ,300 GB File Transfer ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது.

மேலும் நீங்கள் அன்லிமிடெட் வலைத்தளத்தை ஹோஸ் செய்து கொள்ளலாம்.

PREMIUM(ரூ.3,299/1 மாதம்)

PREMIUM ஹோஸ்டிங் பிளானில் அன்லிமிடெட் வலைத்தளத்தை ஹோஸ் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது .

மேலும் 200GB Disk Storage ,500 GB File Transfer ,இலவச SSL Certificate மற்றும் WHMCS வழங்கப்படுகின்றது.

Specialized Hosting

இந்த ஹோஸ்டிங் பிளான்களில் வேர்ட்பிரஸ், CMS மற்றும் ஈ-காமர்ஸ் போன்ற வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்யக்கூடிய சிறப்பு அம்சங்களை BigRock ஹோஸ்டிங் சலுகையாக வழங்குகின்றது.

WordPress Hosting

WordPress Basic

STARTER LITE(ரூ.199/1 மாதம் /3 வருடம்)

இந்த STARTER LITE ஹோஸ்டிங் பிளானில் நீங்கள் ஒரு WordPress வலைத்தளத்தை மட்டுமே ஹோஸ்ட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 5GB Storage ,Dual Core CPU,2GB RAM ஆகியவை வழங்கப்படுகின்றது .

PERFORMANCE LITE(ரூ.299/1 மாதம் /3 வருடம்)

PERFORMANCE LITE ஹோஸ்டிங் பிளான் பொறுத்தவரை நீங்கள் இரண்டு WordPress வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 20 GB Storage,Quad Core CPU,4 GB RAM போன்றவை வழங்கப்படுகின்றது

BUSINESS LITE(ரூ.399/1 மாதம் /3 வருடம்)

நீங்கள் BUSINESS LITE ஹோஸ்டிங் பிளானில் 3 வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம் .

மேலும் இதில் 40 GB Storage,Hexa Core CPU,6 GB RAM ஆகியவை வழங்கப்படுகின்றது

PROFESSIONAL LITE(ரூ.499/1 மாதம் /3 வருடம்)

PROFESSIONAL LITE பிளானில் ஐந்து வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை நீங்கள் ஹோஸ்ட் செய்து கொள்ளமுடியும்.

மேலும் 40 GB Storage.Hexa Core CPU,6 GB RAM ஆகியவைவழங்கப்படுகின்றது

WordPress Suite

STARTER(ரூ.599/1 மாதம் /3 வருடம்)

ADVANCED(ரூ.899/1 மாதம் /3 வருடம்)

BUSINESS(ரூ.1,199/1 மாதம் /3 வருடம்)

PROFESSIONAL(ரூ.2,198/1 மாதம் /3 வருடம்)

CMS Hosting

Ecommerce Hosting

Cloud Hosting:

Cloud ஹோஸ்டிங் Shared ஹோஸ்டிங்கை விட சற்று சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான ஹோஸ்டிங் ஆகும் ஆனால் Cloud ஹோஸ்டிங் VPS ஹோஸ்டிங் போல விலை அதிகம் இல்லை.

Standard –
Enhanced –
Premium –
Ultimate –
Dedicated
MACH-1 –
MACH-2 –
MACH-3 –
MACH-4 –

Bigrock ஹோஸ்டிங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Bigrock ஹோஸ்டிங் தனது Service ஐ மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது சில விஷயங்களை நன்றாக செய்கின்றது .

அதுபோலவே சிலவற்றை சரியாக செய்வது இல்லை அதை பற்றி இப்போது விளக்கமாக பார்க்கலாம்.

நன்மைகள்

  • இந்த Bigrock ஹோஸ்டிங் இல் வாங்கிய ஹோஸ்டிங் பிளானில் உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்த பிறகு அது வழங்கக்கூடிய Service இல் குறைபாடுகளை கண்டால் ஹோஸ்டிங் வாங்கிய
    30 நாட்களுக்குள் நீங்கள் செலுத்திய பணத்தை முழுமையாக திருப்பி தருவதாக உத்திரவாதம் வழங்குகின்றது.
  • நீங்கள் வாங்கிய ஹோஸ்டிங் பிளானிற்கு Wired Transfer மற்றும் Paypal மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.
  • Shared ஹோஸ்டிங் மற்றும் Cloud ஹோஸ்டிங் பிளான்களை குறைந்த விலையில் வழங்குகின்றது.

தீமைகள்

  • இது குறைந்த விலையில் ஹோஸ்டிங் வழங்குவதற்கு காரணம் ,என்னவென்றால் நீங்கள் வலைத்தள ஹோஸ்டிங்கின் அத்தியாவசிய அம்சங்களுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறீர்கள்.
  • மேம்பட்ட சிறப்பு அம்சங்கள் குறைந்த விலை ஹோஸ்டிங் பிளானில் வழங்குவதில்லை.
  • உதரணமாக ,மற்ற ஹோஸ்டிங் நிறுவனம் ஹோஸ்டிங் பிளான்களுடன் இலவச SSL சான்றிதழ் வழங்குகின்றது,ஆனால் Bigrock வழங்குவதில்லை.

Conclusion

நீங்கள் இப்போது Bigrock ஹோஸ்டிங் பற்றிய முழு விவரங்களையும் இந்த Poster மூலம் தெரிந்து இருப்பீர்கள் என்று நான் நப்புகின்றேன்.

Bigrock வெப் ஹோஸ்டிங் என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிறந்த ஹோஸ்டிங் நிறுவனமாகும்.
எனவே உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்டிங் செய்வதற்கு இந்தியாவில் ஒரு சிறந்த ஹோஸ்ட் தேவைப்பட்டால் இதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

குறைந்த விலையில் அடிப்படை ஹோஸ்டிங் தேவைகளை Bigrock வழங்குகின்றது.

நீங்கள் Entertainment மற்றும் Small Business வலைத்தளம் வைத்திருந்தால் உங்களுக்கு Bigrock ஹோஸ்டிங் சிறந்த தேர்வாகும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப Bigrock ஹோஸ்டிங் பிளான்களை தேர்வு செய்து கொள்ளவும் .

மேலும் உங்களின் Bigrock ஹோஸ்டிங் அனுபவத்தை எங்களுடன் Share செய்து கொள்ளவும் .

உங்களுடைய அனுபவம் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

 

Leave a Comment