Hostinger Review in Tamil, Setup, Pro and Cons

0
55

HOSTINGER

Hostinger ஒரு சிறந்த Web Hosting நிறுவனம் ஆகும் .இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இப்போது உலகெங்கும் 176 நாடுகளில் தனது Hosting Service ஐ செய்து வருகிறது.

இந்நிறுவனம் 29 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கிறது .

ஒவ்வொரு நாளும் சராசரியாக 15,000 புது வாடிக்கையாளர்கள் இந்த Hostinger நிறுவனத்தில் இல் இணைகின்றனர்.

இப்போது நாம் Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய Hosting Plans இன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Hostinger சிறப்புஅம்சம்

  • நீங்கள் Hostinger இல் உங்கள் Website ஐ Host செய்தால் அதன் Speed எப்போதும் Fast ஆக இருக்கும்.
  • உங்கள் Website இல் இருக்கக்கூடிய Page களை மிக குறைவான நேரத்தில் Page Loading (0.14 Sec )செய்து தருகின்றது .
  • Hostinger Server Speed பொருத்தவரை அனைத்து நேரத்திலும் Down Time இல்லாமல் Up Time இல் இருக்கும்.
  • Hostinger தனது வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பகத்தன்மையே பெற்றுள்ளது.எனவே இது 100 % பாதுகாப்பான Web Hosting நிறுவனமாகும்.
  • Hostinger வழங்கக்கூடிய அனைத்து Web Hosting Plans களும் மற்ற Hosting நிறுனவங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் இருக்கின்றது.
  • இது நிறைய Hosting சலுகைகளை தனது வடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
  • வாடிக்கையாளர் ஆதரவை 24 மணி நேரமும் பல மொழிகளில் வழங்குகின்றது.

Hostinger Hosting  Plans

HOSTINGER PLANS

Shared Hosting என்றால் என்ன ?

Shared  Hosting இல் பல வெவ்வேறு வலைத்தளங்கள் அனைத்தும் ஒரே Server இல் Host செய்யப்படுகின்றது.

Share Hosting Plan என்பது உங்களுடைய வலைத்தளம் Host செய்யப்பட்டுள்ள Server இல் மற்ற வலைத்தளங்களும் Host செய்யப்பட்டு இருக்கும்.

இந்த Plan ஐ தேர்வு செய்யக்கூடிய ஒவ்வொரு வலைத்தள உரிமையாளர்களுக்கும் Server இல் ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு இடங்கள் மற்றும் வளங்கள் ஒதுக்கப்படுகிறது.

இது தனது Server Space ஐ பல வலைத்தளங்களுடன் Share செய்து கொள்வதால்  குறைவான விலையில் Hosting Plan ஐ வழங்குகின்றது.

Shared Hosting Plan என்பது ஒரு Powerful Hosting அல்ல, எனவே Shared Hosting Plan இல் உங்கள் வலைதள Content அல்லது உங்கள் Server இல் இருக்கக்கூடிய மற்ற வலைத்தள உரிமையாளர்களின் Content ஒரு பெரிய வெற்றியைப் பெற்றால், உங்கள் வலைதளத்தின் வேகம் குறைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது .

அதனால் நீங்கள் சில நேரத்தில் உங்களுடைய  வலைதளத்தை  இழக்க கூட நேரிடலாம்.

புதிதாக வலைத்தளம் தொடங்குபவர்களுக்கும் மற்றும் குறைவான Traffic வரக்கூடிய வலைத்தளத்தை வைத்து இருப்பவர்களுக்கும் இந்த Shared Hosting Plan சிறந்த தேர்வாகும்.

Shared Hosting சிறப்பு அம்சங்கள் 

1-click installer

E-Commerce scripts, CMS settings,Blogg Website, Froum Software மற்றும் பல பிரபலமான Tolls களை 1-clickஇல் நீங்கள் எளிதாக Installer செய்து கொள்ளமுடியும் .

Access Manager

நீங்கள் பல நபர்களுடன் ஒரு Project-க்கு பணிபுரியும் போது, உங்களுடைய தனிப்பட்ட Hosting Login விவரங்களைப் Share செய்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கும்.

அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட Hosting Login ஐ Share செய்து கொள்ளாமல்,Access Manager ஐ பயன்படுத்தி உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு Project இல் பணிபுரியும் நபர்களுக்கு அவர்களின் வேலைக்கான Access ஐ மட்டும் வழங்கமுடியும்.

FTP/File Managers

உங்களுடைய வலைத்தளம் Host செய்யப்பட்டுள்ள Server இல் இருக்கக்கூடிய Files,Directory ,Code அனைத்தயும் Edit செய்வதற்க்கு Web Based Manager ஐ பயன்படுத்தலாம் அல்லது FileZilla போன்ற உங்களுக்கு பிடித்த பிற FTP Software களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

Weekly Backup

CPanel உதவியுடன் உங்களுடைய வலைத்தளத்தின்  Database மற்றும் Files கள் அனைத்தும்  Automatic ஆக Weekly Backup எடுத்துக்கொள்ளப்படும்.

Catching Manager

உங்கள் வலைதளத்தில் Catching Manager ஐ Enable செய்யும் போது தேவை இல்லாத Storage நீங்கப்படுகிறது.

அதனால் உங்களுடைய வலைதளம் வேகமாக செயல்படும்.

இலவச டொமைன்

நீங்கள் Share Hosting Plan இல் Premium அல்லது Bussiness Plan ஐ 1 வருடம் தேர்வு செய்தால் உங்களுக்கு முதல் 1 வருடத்திற்கு இலவச டொமைன் வழங்குகின்றது .

Powerfull Controlpanel

ஒரு வலைத்தளத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து செயல்திறனையும் வழங்குகின்றது.

Cloud Hosting என்றால் என்ன ?

Cloud Hosting என்பது உங்களுடைய வலைதளம் Multiple Server இல் Host செய்யப்படும.

அதனால் உங்கள் வலைதளம் எப்போதும் Down Time இல்லாமல் Up Time ல் செயல்படும்.

hostinger Cloud hosting

E-Commerce வலைத்தளம் மற்றும் அதிக போக்குவரத்து வரக்கூடிய வலைத்தளம் வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் Cloud Hosting Plan சரியான தேர்வாகும்.

மேல்கூறிய Share Hosting Plans களின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் Cloud Hosting Plan இல் உள்ளடங்கும்.

Deticated IP

உங்கள் வலைத்தளம் Host செய்யப்பட்டுள்ள Server க்கு வழங்கக்கூடிய தனித்துவமான IP ஐ தான் Deticated IP எனப்படுகின்றது.

Isolate Resources

Share Hosting Plan களுடன் ஒப்பிடும்போது Isolate Resources Cloud Hosting Plan களில் மட்டும் வழக்கப்படுகிறது.

இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்

உங்கள் வலைதள பார்வையாளரின் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்க HTTPS வெப் புதிய தரமாக மாறி வருகிறது , .

CloudFlare Integration 

DDoS பாதுகாப்பு, WAF, கண்காணிப்பு Tools மற்றும் பிற மேம்பட்ட கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது .

WordPress Hosting என்றால் என்ன ?

WordPress என்பது உலகளவில் மிகவும் பிரபலமான Content Management System ஆகும்.

hostinger wordpress hosting

Hostinger நிறுவனம் Shared Hosting Plan ஐ பயன்படுத்தி நீங்கள் ஒரு WordPress வலைத்தளத்தை Host செய்யலாம்.

உங்களிடம் WordPress வலைத்தளம் இருந்தால் Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய WordPress Hosting Plan ஐ பயன்படுத்துவது சிறப்பாகும் .

நான் ஏற்கனவே Shared Hosting Plan களின் சிறப்பு அம்சங்களை பற்றி  விவரித்துள்ளேன் அவை அனைத்தும் WordPress Hosting Plans இல் உள்ளடங்கும்.

WordPress Hosting Plan மேலும் பல குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களுடன் வருகின்றன அவை.

1Click இல் WordPress ஐ நீங்கள் Install செய்து கொள்ளமுடியும்.

WordPress நிபுணர்களிடமிருந்து 24 மணி நேரமும்  உங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது .

WordPress வலைதளத்தை உருவாக்குவது எப்படி என்பதற்கு Hostinger நிறுவனம் இலவசமாக பயிற்சி அளிக்கின்றது.

VPS Hosting  என்றால் என்ன ?

VPS Hosting என்பது உங்களுடைய வலைத்தளத்திற்கு மட்டும் ஒரு Serverஐ முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கு வழங்கக்கூடிய Hosting Plan ஆகும்.

hostinger vps hosting

இந்த VPS Hosting Plan இல் உங்கள் வலைத்தளம் Host செய்யப்பட்டுள்ள Server இன் Conrtrol முழுவதும் உங்களுக்கு வழங்கப்படும் .எனேவே Server Management அனைத்தயும் நீங்களே செய்து கொள்ளவேண்டும்.

VPS Hosting என்பது ஒரு Powerful Server Hosting Service ஆகும் .அதனால் உங்கள் வலைதளத்தின் Server வேகம் எப்போதும் UP Time இல் செயல்படும்.

அதிகமான Traffic வரக்கூடிய வலைத்தளத்திற்கு இந்த VPS Hosting Plan சிறந்த தேர்வாக இருக்கும்.

Hostinger நன்மைகள்

24 மணிநேரம் வாடிக்கையாளர் ஆதரவு

வாடிக்கையாளர் ஆதரவு  என்பது  ஒரு வலை ஹோஸ்டிங் பொறுத்தவரை  மிக அவசியமான  ஒன்றாகும்.

ஏனென்றால் உங்கள் வலைதளம் திடீரென்று  செயலிழந்துவிட்டால், நீங்கள் விரைவில் ஒரு வாடிக்கையாளர் ஆதரவு நபருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் உங்களுடைய  வலைதளத்தில்   வரக்கடிய வருமானத்தை நீங்கள்  இழக்க நேரிடும்.

Hostinger Customer Support

ஹோஸ்டிங்ர் பொறுத்தவரை 24 மணிநேரமும் வாடிக்கையாளர் ஆதரவு   பல மொழிகளில் நேரடி அரட்டை மூலமாக வழங்குகிறது.

30 நாட்களில் பணம் திரும்ப பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதம்:

Hostinger 30 day money-back guarantee

நீங்கள் முதன் முறையாக  ஹோஸ்டிங்ரில்  ஹோஸ்டிங்  வாங்கும் போது அதன் செயல்திறன்  அல்லது  அனுபவம்  உங்களுக்கு  பிடிக்கவில்லை  என்றால் 30 நாட்களில் உங்களுடைய  பணத்தை  திரும்ப பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறார்கள்.

இது ஒரு வருடம் ஹோஸ்டிங் பிளான்களுக்கு மட்டும் பொருந்தும் ,மாத ஹோஸ்டிங் பிளானிற்கு பொருந்தாது .

வெப்சைட்  பேஜ் லோடிங் நேரம் விரைவானது :

ஒரு வலைதளத்திற்கு பார்வையாளர்கள் அதிகமா வர வேண்டும் என்றால் பேஜ் லோடிங் நேரம் விரைவாக இருக்க வேண்டும் என்பது  அவசியமான ஒன்றாகும் .

ஹோஸ்டிங்ர் மமிக குறைவான நேரத்தில் 0.14 வினாடியில்  பேஜ் லோடிங் செய்து தருகிறது .

Hostinger Speed

ஹோஸ்டிங்ர்  உங்களுடைய  வலைதளம் இயக்கத்திற்கு  99.99%  உத்தரவாதம் அளிக்கிறது.


யூசர் பிரிண்ட்லி கண்ட்ரோல் பேனல் :

ஒரு வெப் ஹோஸ்டிங் பொறுத்தவரை கண்ட்ரோல் பேனல் என்பது முக்கியமான ஒன்றாகும் .

Hostingerpanel

ஹோஸ்டிங்ர்  எளிதான முறையில் பயப்படுத்தக்கூடிய  யூசர் பிரிண்ட்லி கண்ட்ரோல் பேனலை வழங்குகிறது மற்றும் தேவையான அனைத்து ஐகான்களும் ஒரே இடத்தில் கொடுப்பட்டுள்ளது .

இலவச வலைத்தள பில்டர்:

ஹோஸ்டிங்ர்  இலவச வலைத்தள பில்டரை வழங்குகிறது ,இதிலுள்ள வேர்ட்பிரஸ் டெம்ப்ளேட்டிலிருந்து உங்களுக்கு தேவையானதை  தேர்வுசெய்து, உங்களுடைய வலைத்தளத்தை நேரலையில் நீங்கள்  எப்படி காண விரும்புகிறீர்களோ அதன்படி  Customize செய்து கொள்ளலாம் .

hostinger website builder

Hostinger தீமைகள்:

Live Chat Support 

Hostinger Login

நீங்கள் Hostinger வலைத்தளத்தில் Login செய்யாமல்  Live Chat Support ஐ  அணுக முடியாது.

Control panel
hostinger hpanelHostinger Control panelக்கு பதிலாக சொந்த Hosting panel ஐ வழங்குகின்றது.
எனவே நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்திய Control panel ஐ இழக்க நேரிடும்.

Hosting Panel வழங்கக்கூடிய User Interface பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும்.

அதனால் நீங்கள் புரிந்து கொள்வதற்கு சற்று காலதாமதாகும்.

Price Offer

hostinger offers

Hostinger நிறுவனம் தனது Hosting Plan களுக்கு பல  சிறந்த Price Offers ஐ வழங்குகின்றது .

ஆனால் நீங்கள் குறைந்தபட்சம் 1வருடதிற்கு Hosting Plan ஐ தேர்வு செய்யவேண்டும்.

அப்போதுதான் Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய Price Offers ஐ நீங்கள் பயப்படுத்தி கொள்ளமுடியும்.

Conclusion:

Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய  Hosting Plans களின் விலை மற்றும் சிறப்புஅம்சங்களை பற்றி இந்த Poster மூலமாக உங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் எதற்காக Hostinger  நிறுவனத்தில் உங்கள் வலைத்தளத்திற்கு Hosting Plan வாங்க வேண்டும் என்றால் மற்ற Hosting நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது Server இயக்கத்திற்கு  99.99%  உத்தரவாதம் அளிக்கிறது.

Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய அனைத்து Hosting Plans களும் உங்களுக்கு அன்லிமிடெட் Banwidth மற்றும் Email கணக்குகளை வழங்குகிறது.

உங்கள் வலைதளத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்க்கு 24 மணி நேரமும் Live Chat மூலமாக Customer Service Support ஐ Hostinger நிறுவனம் வழங்குகிறது.

உங்கள்  வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Page களை 0.14 வினாடி நேரத்தில் Loading செய்து தருகின்றது.

எனவே உங்கள் வலைத்தளத்தின் போக்குவரத்தை இழக்க நேரிடாது .

Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய  Hosting Plans உங்கள் வலைத்தளத்திற்கு சரியானதா இருக்கும் என்றால் உங்கள் விருப்ப Hosting Plans ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here