How to Buy Motor in Tamil
மோட்டார் என்பது மின்னாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் ஓர் இயந்திரம் ஆகும். நீங்கள் கடைக்கு மோட்டாரை வாங்க செல்கிறீர்கள் என்றால் அங்கு உங்களுக்கு எந்த மாதிரி மோட்டாரை பார்க்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தால் இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.
KW:
KW என்பது மோட்டாரின் சக்தியை அளவிட பயன்படுத்தப்படும் ஓர் அலகாகும். அதாவது ஒவ்வொரு மோட்டாரின் விலை என்பது கிலோவாட் என்கின்ற அளவை பொருத்துதான் மாறுபடும். தேவையை விட அதிகமான மோட்டார் சக்தியை வாங்குவது உங்களுக்கு அதிக ஆரம்ப விலையையும் மற்றும் அதிக விலையும் உருவாக்கும்.
எனவே உங்களுக்கு முதலில் எவ்வளவு மோட்டார் சக்தி வேண்டும் என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.
Frequency:
frequency என்பது மோட்டார் எந்த அதிர்வெண்ணில் சுற்றக்கூடியது என்பதை முடிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அலகாகும். இந்தியாவை பொருத்தவரை நாம் 50 அதிர்வெண்ணில் தான் மோட்டாரை வாங்க வேண்டும்.
Voltage:
மின்னழுத்தம் என்பது இரண்டு மின்னூட்டம் பெற்ற புள்ளிகளுக்கு இடையே இருக்கும் அழுத்தத்தை குறிக்கும் அலகாகும். ஒரு மோட்டாரை வாங்கும் பொழுது நீங்கள் அந்த மோட்டார் மோட்டாருக்கு எவ்வளவு மின்னழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் 230 முதல் 11 ஆயிரம் வோல்டேஜ் வரை மோட்டார்கள் விற்கப்படுகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஏதேனும் மோட்டார் வாங்குகிறீர்கள் என்றால் 130 முதல் 440 வரை மின்னழுத்தம் கொண்ட மோட்டார்களை வாங்கலாம்.
Insulation Class:
இன்சுலேஷன் கிளாஸ் என்பது மோட்டாரின் சுற்றுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காப்பான் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அளவாகும். காப்பான் A, B, C, D, E, F and H என்று ஏழு விதமாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் A கிளாஸ் (105 deg.) என்பது மிக குறைந்த அளவு வெப்பத்தைத் தாங்கக் கூடிய காப்பான்கள் ஆகவும் H (155 deg.) கிளாஸ் என்பது மிகுந்த அளவில் வெப்பத்தைத் தாங்கக் கூடிய காப்பான்கள் ஆகும் இருக்கின்றன.
Frame:
Frame என்பது மோட்டாரை இருக்கு வைக்கப்பட்டுள்ள அல்லது மோட்டாரை தாங்கி பிடிக்கக்கூடிய போல்ட்டின் அளவை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் அளவாகும். ஏற்க இருக்கக்கூடிய மோட்டாருக்கு பதிலாக புதியதாக மோட்டார் வாங்குகிறீர்கள் என்றால் பிரேம் சைஸை அளவிடுவது நல்லது.
Mounting:
என்பது மோட்டாரை எந்த விதமாக வைக்கிறீர்கள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது foot mounting மற்றும் flange mounting என்று வகைப்படுத்தப்படுகிறது. Foot mounting வகைப்படுத்தப் படுகிறது என்பது தரையில் மோட்டார் இடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். Flange mounting என்பது மோட்டாரை அந்தரத்தில் ஏதேனும் mechanical parts உடன் இணைத்து பயன்படுத்தப்படும் ஒரு வகையாகும்.
Motor வேகம்:
மோட்டார் வேகம் என்பது மோட்டார் எவ்வளவு வேகமாக தன்னுடைய shaft ஐ சுற்றுகிறது என்பதை குறிப்பிட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நாம் 50 Hz பயன்படுத்துவதால் நீங்கள் 600, 750, 1000, 1500, 3000 போன்ற வேகங்களில் மோட்டரை காணலாம். இவற்றில் உங்களுக்கு எந்த வேகம் தகுந்தது அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நீரில் மூழ்கக்கூடிய பம்பிற்கு, அதிவேக மோட்டாரைத் தேர்வுசெய்க