உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் வருகை மற்றும் Organic Search ஐ அதிகரிக்க நீங்கள் தயாரா?
அப்படி என்றால் உங்கள் வலைத்தளத்தை Serach Engine இல் மேம்படுத்துவதற்கு SEO Check List இல் நீங்கள் என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
வலைத்தளங்கள் வைத்து இருக்கக்கூடிய அனைத்து உரிமையாளருக்கும் SEO Service தேவைப்படகூடிய ஒன்றாக மாறிவிட்டது.
வலைத்தள சிந்தனையின் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுவதற்காக நீங்கள் SEO மற்றும் Organic Search இல் அதிக கவனம் செலுத்தவேண்டும் .
அவ்வாறு செய்யும் போது அதிக பார்வையாளர்கள் உங்கள் தளத்திற்கு வர தொடங்குவார்கள் .
உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்த நீங்கள் மூன்று முக்கிய SEO Check List செய்யவேண்டும் .அது என்னெவென்று இப்போது விரிவாக பார்க்கலாம்.
- Technical SEO
- On-page SEO
- External SEO
Technical SEO Check List என்றால் என்ன ?
Technical SEO உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்த உதவுகின்றது.
உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Technical SEO சிக்கல்களை சரிசெய்வது அவ்வளவு கடினம் அல்ல.
ஆனால் அதற்கு நீங்கள் கீலே கொடுக்கப்பட்டுள்ள SEO Checklist ஐ உங்கள் வலைத்தளத்தில் சரிபார்க்கவேண்டும் .
Free Reporting Platforms
உங்கள் வலைத்தளத்தில் Google Search Console , Bing Webmaster, Google Analytics மற்றும் Google Tag Manager ஆகிய கருவிகளை இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் இந்த Tools அனைத்தும் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றது.
இதன் மூலமாக எந்த மாதிரியான பார்வையாளர்கள் அதிகம் வருகின்றன என்பதை நீங்கள் கண்டறியலாம் .
அதன் பிறகு அதுக்கு ஏற்ப உங்கள் வலைப் பக்கங்களில் இருக்கக்கூடிய Content களை மாற்றி அமைக்கும் போது,உங்கள் வலைத்தள போக்குவரத்து அதிகரிக்கும்.
எனவே உங்கள் வலைத்தளத்தை Serach இன் மேம்படுவதற்கு Free Reporting Platforms உதவியாக இருக்கின்றது.
XML Sitemap
Site Map என்பது ஒரு XML File Format ஆகும் .இதன் மூலம் உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய பக்கங்களின் விவரங்களை பற்றி விளக்க Search Engine க்கு முடியும்.
உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து பக்கங்களின் URL களையும் Search Engine இல் சமர்ப்பிக்கும் ஒரு நவீன வழியாக XML Site Map இருக்கின்றது.
இதனால் உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து பங்கங்களும் Serach Engine இல் விரைவில் Index ஆகும்.
எனவே உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுவதற்க்கு ஒரு சிறந்த வழியாக XML Site Map உதவுகின்றது .
Robots.txt
Search Engine உங்கள் வலைதளத்தில் பார்க்கக்கூடிய அனைத்து பக்கங்களையும் Index செய்யும்.
எனவே Search Engine க்கு நீங்கள் பரிந்துரை செய்கின்ற உங்கள் வலைத்தள பக்கங்களை மட்டும் Index செய்வதற்கு இந்த Robots.txt file உங்களுக்கு உதவுகின்றது.
Domains
உங்கள் Main டொமைன் பெயரை தவிர நீங்கள் பயன்படுத்தும் Sub டொமைன் பெயர்கள் அனைத்தும் என்ன செய்கின்றன என்பது பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவை அனைத்தும் செயல்பாட்டில் இல்லை என்றால் அது நல்லது.
அதுபோலவே அவை அனைத்தும் செயல்படும் போது எது உங்கள் Main டொமைன் பெயர் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இதனால் Serach Engine இல் உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த சிக்கலாக இருக்கும்.
எனவே உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து டொமைன் பெயர்களை சரிபார்த்து கொள்ளவும்.
Site Architecture
Site Architecture என்பது உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய பக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு Structure Format இல் உருவாக்குவதாகும்.
ஒரு சிறந்த Site Architecture மூலமாக உங்கள் வலைத்தளத்தின் Content களை Search Engine இல் பார்வையாளர்கள் தேடும் போது எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.
Speed
உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் சிறிது நேரம் மட்டும்தான் செலவிடுக்கின்றன.
எனவே உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Content பக்கங்களை பார்வையாளர்கள் பார்க்கும் போது கால தாமதம் ஏற்பட்டால் பார்வையாளர்கள் வெளியே சென்று விடுகிறார்கள்.
இதனால் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய போக்குவரத்து குறையை தொடங்கும்.
எனவே இந்த சிக்கலை தவிர்க்க உங்கள் வலைத்தள வேகத்தை நீங்கள் அதிகரிக்க வேண்டும்.
Mobile-Friendly
உங்கள் வலைத்தளம் Mobile User Friendly ஆக இருக்க வேண்டும். ஏனென்றல் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் Mobile களை அதிகம் பயன்படுகின்றன .
Google இன் User-Friendly சோதனை கருவி மூலம் உங்கள் வலைத்தளத்தை இயக்க மறக்காதீர்கள்.
மேலும், நீங்கள் பயன்படுத்த கூடிய Mobile ,Tablet ,Laptop ,Personal Computer ஆகிய அனைத்து சாதனங்களிலும் உங்கள் வலைத்தளம் User – Friendly ஆக செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .
404 Pages
உங்கள் வலைத்தளத்தில் 404 பக்கத்தை உருவாக்க மறக்க வேண்டாம் மற்றும் அதில் பயனுள்ள தகவல்களை போஸ்ட் செய்து வைக்கவும்.
உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் வரும் போது Browser பிழைகள் ஏற்பட்டால் அவர்கள் வெளியே சென்று விடுவார்கள் .
அந்த சிக்கலை நீங்கள் சரி செய்வதற்கு தான் உங்கள் வலைத்தளத்தில் 404 பக்கத்தை பயனுள்ள தகவல்களுடன் உருவாக்கி இருக்கீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும் .
SSL
உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்த Mobile User Friendly மற்றும் வலைத்தள வேகம் எவ்வளவு முக்கியமோ அது போலவே SSL ம் முக்கியம்.
ஏனென்றல் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் Data களை பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவுகின்றது .
உங்கள் வலைத்தளத்தில் SSL இல்லையென்றால் Chrome அல்லது பிற Browser களின் பாதுகாப்பு எச்சரிக்கையை வாடிக்கையாளர்கள் பார்க்கும்போது உங்கள் வலைத்தளத்திற்கு வருவதற்கு முன்பே அவர்களை நீங்கள் இழக்க நேரிடும்.
Plugins, Add-ons, or Extensions
உங்கள் வளைத்தளத்தில் CMS பயன்படுத்துகிறீர்கள் என்றால் SEO மேம்படுத்தலுக்கு நிறைய Plugins, Add-ons மற்றும் Extensions களை உபயோகப்படுத்தி இருப்பீர்கள்.
அதனால் நீங்கள் உபோயோகப்படுத்தக்கூடிய WordPress,Drupal, Magento ஆகியவற்றில் SEO மேம்படுத்தலுக்காக பயன்படுத்தி இருக்கின்ற Plugins, Add-ons, or Extensions Tools கள் அனைத்தும் நம்பகமானத என்று நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
On-page SEO Check List என்றால் என்ன?
பொதுவாக உங்கள் வலைத்தள பக்கத்தில் இருக்கக்கூடிய Title, Keyword ,Heading,Meta Description Image ,Content Url கள் ஆகியவற்றை Search Engine இல் மேம்படுத்த இந்த On-page SEO Checklist உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இப்போது நாம் On-page SEO Checklist பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
Keywords & Topics
Keywords & Topics மூலமாக உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் வருகையை நீங்கள் அதிகரிப்பதற்கு முன்பு அந்த சூழலை எதற்காக உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய இலக்கு பார்வையாளர்களைப் பற்றி நீங்கள் முக்கிய ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் அதன் மூலமாக உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் கண்டுபிடிக்க உங்கள் பார்வையாளர்கள் பயன்படுத்தும் Keywords மற்றும் Topics ஐ நீங்கள் கண்டுபிடிக்க முடியும்
இப்போது அதற்கு ஏற்றவாறு உங்கள் வலைத்தள Content களை நீங்கள் அமைக்க வேண்டும்.
அதன் பிறகு உங்கள் வலைத்தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதன் மூலமாக உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் சுலபமாக மேம்படுத்தலாம்.
Content
நீங்கள் Search Engine இல் உங்கள் வலைத்தளத்தை Ranking செய்ய விரும்பினால், நீங்கள் சிறந்த அதிக வார்த்தைகள் இருக்கக்கூடிய Content களை வெளியிட வேண்டும்.
நீங்கள் குறைவான வார்த்தைகள் கொண்ட Content களை வெளியிடும் போது சிறந்த Content களை கொண்டுள்ள வலைத்தளங்களுடன் போட்டியிடுவது கடினம்.
எனவே உயர் தரம் வாய்ந்த சிறந்த Content களை நீங்கள் உங்கள் வளைத்தளத்தில் வெளியிடும் போது Search Engine இல் சிறந்த Ranking பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் உங்கள் வலைத்தளத்தில் சிறந்த தரமான Content களை வெளியிட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
URL
உங்கள் வலைத்தள Poster க்கு குறுகிய URL களை நீங்கள் உருவாக்கும் போது Search Engine மேம்படுவதற்கு எளிதாக இருக்கும்.
உங்கள் URL பக்கங்களை வலைத்தள வாடிக்கையாளர்கள் கிளிக் செய்யும் போது அவர்கள் எதிர்பார்க்க கூடிய முக்கிய Keyword ஐ அதில் நீங்கள் முக்கியமாக வழங்க வேண்டும்.
Title
உங்கள் வளைத்தளத்தில் நீங்கள் போஸ்ட் செய்த ஒவ்வொரு பக்கத்திற்கும் பொருத்தமான, தனித்துவமான Title ஐ நீங்கள் அமைக்க வேண்டும்.
மேலும் உங்கள் வலைத்தள போஸ்ட்Title இல் மிகவும் பொருத்தமான நீளம் மற்றும் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கவேண்டும்.
அதை நீங்கள் செய்து இருக்கீங்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .
Meta Description
Title போலவே, ஒவ்வொரு போஸ்ட் பக்கத்திற்கும் Meta Descrption விளக்கம் இருக்க வேண்டும்.
அதுபோல நீங்கள் போஸ்ட் செய்துள்ள Content தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைக் கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Headings
உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுவதற்கு Heading அல்லது H 1 Tag முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது .
Heading அல்லது H 1 Tag உங்கள் போஸ்டரில் முதலில் போடவேண்டும் மேலும் அதில் நீங்கள் எழுதி இருக்கக்கூடிய போஸ்ட் Content க்கு பொருத்தமான முக்கிய Keyword ஐ பயன்படுத்தி இருக்க வேண்டும்.
எனவே நீங்கள் போட கூடிய அனைத்து Poster களிலும் ஒரு Heading அல்லது H 1 Tag இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .
Image Alt Attributes
Alt Attributes என்பது உங்கள் வலைத்தளத்தில் Upload செய்யப்பட்ட Image க்கு வழங்கக்கூடிய பெயராகும்.
நீங்கள் Upload செய்த எல்லா Image களுக்கும் பொருத்தமான alt Attributes பெயரை பயன்படுத்தி இருக்கீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
முடிந்தவரை , உங்கள் வலைத்தள Post Content க்கு ஏற்றவாறு முக்கிய Keyword களை உங்கள் Image இன் alt Attributes பெயரில் சேர்க்க முயற்சிக்கவும் .
உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Image கள் எதைப் பற்றி என்பதைப் Search Engine புரிந்துகொள்ள Alt Attributes உதவியாக இருக்கும்.
External SEO Check List என்றால் என்ன ?
External SEO என்பது உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் ஆகும் .
Search Engine இல் உங்கள் வலைதள Content பொருத்தத்தையும் நம்பிக்கையையும் உருவாக்க On-page SEO உதவுகின்றது .
அதுபோல உங்கள் வலைத்தள அதிகாரம் மற்றும் அந்தஸ்தைப் மேம்படுத்த External SEO உதவுகின்றது.
Links
உங்கள் வலைத்தள Content பக்கங்களில் இருக்கக்கூடிய அனைத்து Link களும் Broken ஆகாமல் இருக்கின்றதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
Local Search
Local Search SEO என்பது உங்கள் வலைத்தள பார்வையாளர்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய இடங்களை உங்கள் வலைத்தள பக்கங்களை இணைத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .
Social Media
Social Media Search Engine உங்கள் வலைத்தள Ranking ஐ நேரடியாக பாதிக்காவிட்டாலும் கூட SEO மேம்பாட்டிற்கு உதவுகின்றது.
எனவே உங்கள் வலைத்தளத்திற்கு சொந்தமான மற்றும் செயலில் உள்ள Social Media Accounts உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் .
Conclusion
எந்தவொரு வலைத்தளமும் Search Engine இல் சிறந்த Ranking பெறுவதற்கு SEO அவசியமாகும் .
நல்ல அடித்தளத்துடன் SEO சேவையே நீங்கள் தொடங்கும்போது Search Engine இல் உங்கள் வலைத்தளத்திற்கான சிறந்த Ranking மற்றும் Organic Search ஐ அதிகப்படுத்த உதவுகின்றது .
உங்கள் வலைத்தளத்தில் சிறந்த SEO சேவையே செய்து இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்துக்கொள்ள மேல்கூறிய அனைத்து SEO Checklist யும் சரிபார்க்கவும்.