Semrush Tool Complete Review in Tamil

0
83

Semrush Tool Complete Review in Tamil

Semrush என்பது ஒரு SEO Tool.இது எதற்காக பயன்படுகின்றது என்று பார்த்தால் உங்களுடைய வலைத்தளத்தை  Serach Engine இல் மேம்படுத்துவதற்கு உதவுகின்றது .

இந்த Semrush Tool 2008 ஆம் ஆண்டில் ஒலெக் ஷெகோலெவ் மற்றும் டிமிட்ரி மெல்னிகோவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

6 மில்லியனுக்கும் அதிகமான வலைத்தள உரிமையாளர்கள் இந்த Semrush Tool ஐ பயப்படுத்தி அவர்களுடைய  வலைத்தளத்தை Serach Engine இல் மேம்படுத்தி பயன் பெற்றுள்ளனர்.

இது ஒரு சிறந்த SEO Tool ஆக வலைத்தள உரிமையாளர்களால் புகழப்படுகின்றது.

Semrush Tool Plans & Pricing 

Semrush Tool Plans & Pricing

ஒவ்வொரு திட்டத்தின் அம்சங்களையும் பொறுத்து Semrush மூன்று விலை திட்டங்களை வழங்குகிறது.

  • Semrush Pro Plan – $119.95/மாதம்
  • Semrush Guru Plan – $229.95/மாதம்
  • Semrush Business plan – $449.95/மாதம்

நீங்கள் ஒரு வருட திட்டத்தை வாங்கும்போது, உங்களுக்கு உடனடியாக 16% வரை விலை சலுகைகள் வழங்கப்படுகின்றது .

இருப்பினும், நீங்கள் ஒரு வருட திட்டத்தை வாங்கும் முன்பு Semrush வழங்கக்கூடிய  7 நாட்கள் இலவச  Trail ஐ உபயோகித்து பார்க்க நான் பரிந்துரைக்கிறேன்.

ஒவ்வொரு Semrush திட்டத்தின் விலையை பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம், இதன்மூலம் எந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை நீங்கள் தீர்மமானித்து கொள்ளுங்கள்.

Semrush Pro Plan

உங்கள் வலைத்தளத்திற்கான எஸ்சிஓ பயணத்தை ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் தொடங்க விரும்பினால் இந்த Semrush Pro Plan உங்களுக்கு போதுமானது.

இந்தத் திட்டத்திற்கு நீங்கள் மாதம் $119.95 செலுத்த வேண்டும் .

இந்தத் திட்டத்தின் மூலம், உங்கள் வலைத்தளத்திற்கு போட்டியாக இருக்கக்கூடிய வலைத்தளத்தின் Backlink analaysis ,Keyeord Research ,Site Audit விவரங்கள் அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

Semrush Guru Plan

இது எஸ்சிஓ நிபுணர்கள், எஸ்சிஓ ஆர்வலர்கள் மற்றும் ஆழமான எஸ்சிஓ SERP Data வை விரும்பக்கூடிய பிளாக்கர்களுக்கு இத்திட்டம் பரிந்துரைக்கப்படுகின்றது .

இந்த திட்டதிற்கு நீங்கள் மாதம் $ 229.95 செலுத்தவேண்டும் .

உங்கள் வலைத்தளத்தை SearchEngine இல் மேம்படுவதற்கு அனைத்து விதமான எஸ்சிஓ அம்சங்களை இது கொண்டுள்ளது .

Semrush Business plan

இது எஸ்சிஓ ஏஜென்சிகளுக்கு ஏற்ற சரியான திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம், மிகப்பெரிய எஸ்சிஓ Data களை நீங்கள் Access செய்து கொள்ளமுடியும் .

இந்தத் திட்டத்திற்கு நீங்கள் மாதம் $499.95 செலுத்தவேண்டும் .

நிறைய வலைத்தள பயனாளர்களின் வலைத்தளத்தை நீங்கள் Search Engine இல் மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு பல எஸ்சிஓ சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Domain Overview

Semrush Domain Overview

பெரும்பாலான SEO  Projects  Domain overview உடன்  தொடங்கப்படுகின்றது .

SEO  பார்வையில் Domain analysis என்பது  Domain ‘Quality ’  ஐ  சரிபார்த்தல் என்று கூறப்படுகின்றது.

உங்கள் வலைத்தளத்தின்  Domain  ஐ எதற்க்கு  overview செய்ய  வேண்டும் என்று யோசிக்கிறீர்களா ?Domain overview செய்யும்போதுதான் SEO மேம்பாடுகள்  உங்கள்  வலைத்தளத்தில் எங்கு தேவைப்படுகின்றது   என்பதை நீங்கள்  அறிந்து செயல்படமுடியும்.

உங்கள்  வலைத்தளத்தின் Domain  URL  ஐ இந்த Semrush Tool இல்  ‘Domain Overview’ என்ற பகுதியில் Type செய்தால் Search Engine இல் உங்கள்  வலைத்தளம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

உலகளவில்  உங்கள் வலைத்த்திற்கு  எந்த நாட்டில் இருந்து பார்வையாளர்கள் அதிகம் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

Semrush  Tool  இல்  Domain overview செய்வது மிகவும் எளிதானது,மேலும் இதில் உங்கள் வலைத்தளத்தின் போட்டியாளர்களின்    Domain  ஐயும்  நீங்கள் overview செய்த்து கொள்ளமுடியும்.

Domain overview measurements Reports

உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு ‘அதிகார மதிப்பெண்’ ஐ வழங்குகின்றது.

ஒரு மாதத்திற்கு உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை காண்பிக்கின்றது.

உங்கள் வலைத்தளத்தின் Backlink ஐ எத்தனை வலைத்தளங்களில் நீங்கள் கொடுத்து உள்ளிர்கள் என்பதை காண்பிக்கின்றது.

உங்கள் வலைத்தள Blog Post இல் எத்தனை Keywords நீங்கள் உபயோகித்து இருக்கீர்கள் என்பதை காண்பிக்கின்றது.

உங்கள் வளைத்ததில் எத்தனை Internal Links உபயோகப்படுத்தி இருக்கீர்கள் என்பதை காண்பிக்கின்றது

உங்கள் வலைத்தளதிற்கான விளம்பர புள்ளிவிவரங்களைக் காண்பிக்கின்றது.

உங்கள் வலைத்தளம் போட்டியிடும் வலைத்தள விவரங்களை காண்பிக்கின்றது

மேலே உள்ள measurements இல் , உங்கள் வலைத்தளத்தின் Quality  பற்றிய விரைவான புரிதலை உங்களுக்கு வழங்குவது ‘அதிகார மதிப்பெண்’ ஆகும்.

Semrush Tool எதை அடிப்படியாக கொண்டு உங்கள் வலைத்தளத்திற்கான  அதிகார மதிப்பெண்’ஐ வழங்குகின்றது என்பதை பார்ப்போம்.

உங்கள் வலைத்தளத்தின் Backlink Data  வை சுட்டிக்காட்டும் மற்ற வலைத்தளங்களின் எண்ணிக்கை மற்றும் ஒரு மாதத்திற்கு உங்களுடைய வலைத்தளத்தில்  வரக்கூடிய organic  search data, organic search traffic ஆகியவற்றின் எண்ணிக்கைகளை வைத்து அதிகார மதிப்பெண்  வழங்கப்படுகின்றது

மொத்தத்தில், Semrush Domain Overview பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒரு SEO பார்வையில் இருந்து ஒரு வலைத்தளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவாக உங்களுக்கு காட்டுகின்றது .

Backlink Analytics

Semrush Backlink Analytics
Semrush Backlink Analytics

எஸ்சிஓவின் மிக முக்கியமான மற்றும் சவாலான பகுதியாக இந்த Backlink Analysis கருதப்படுகின்றது .

Semrush என்பது எஸ்சிஓ நன்மைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு Software ஆகும்.

இந்த Semrush Backlink Analysis கருவி மூலம் நீங்கள் எந்த வலைத்தளத்திற்கும் விரிவான Backlink விவரங்களை பெற முடியும்

மேலும் இந்த கருவி மூலம், உங்கள் போட்டியாளர் வலைத்தளங்களின் Backlink செயல்பாடு, மொத்த Backlink எண்ணிக்கை , அதிகார மதிப்பெண் போன்றவற்றை நீங்கள் கண்காணிக்க முடியும்.

Site Audit

Semrush Site Audit
Semrush Site Audit

Semrush Site Audit கருவி என்பது ஒரு மேம்பட்ட ஆன்-பேஜ் எஸ்சிஓ கருவியாகும்.

இதன் மூலமாக எந்த வலைத்தளத்திலும் ஏற்படக்கூடிய முக்கியமான எஸ்சிஓ சிக்கல்களை அடையாளம் காண முடியும்.

இந்த கருவி மூலம், உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Broken Internal Links , Internal Links இல்லாத பக்கங்கள், அதிக Internal Links இருக்கக்கூடிய பக்கங்கள், anchor text இல்லாத link , மிக நீண்ட link URL கள், தவறான link போன்றவற்றை நீங்கள் காணலாம்.

Semrush Site Audit கருவியுடன் internal link analysis, வலைத்தள Robots.txt File , Page loading time , broken canonical tags , HTTPS , உங்கள் Meta Tag , Google analytics மற்றும் பலவற்றில் ஏற்படக்கூடிய  சிக்கல்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

Keyword Overview

Semrush Keyword Overview

Keyword Overview என்பது எஸ்சிஓவின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் Semrush

Semrush துல்லியமான Keyword Research கருவிக்கு பிரபலமானது.

Keyword தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் பெற்று கொள்வதற்கு இந்த Semrush Keyword Research கருவி உங்களுக்கு உதவுகின்றது.

Keyword Position Tracking

Semrush Keyword Position Tracking

இந்த Semrush Keyword Position Tracking கருவி அனைத்து பிளாக்கர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது .

இந்த கருவி மூலம், உங்கள் வலைத்தளத்தின் வெவ்வேறு keywords search rankings ஐ உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.

Semrush Content Marketing Tool

Semrush Content Marketing Tool
Semrush Content Marketing Tool

Content marketing என்பது உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களை ஈர்பதற்கும் மற்றும் அவர்களை தொடர்ச்சியாகதக்க வைத்துக் கொள்ளுவதற்கு பொருத்தமான மற்றும் மதிப்புமிக்க Content களை உருவாக்கி Publish செய்வதற்கு தேவையான அனைத்து Idea களை உங்களுக்கு வழங்குகின்றது.

Topic Research Tool

Semrush Topic Research Tool

Semrush Topic Research கருவி மூலமாக ஒரே கிளிக்கில் நீங்கள் ஆயிரக்கணக்கான முக்கிய தலைப்பு யோசனைகளைக் கண்டறிய உதவுகிறது.

இந்த கருவியைக் கொண்டு உங்கள் வலைத்தளத்திக்கு வரக்கூடிய பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப Contet எழுதுவதற்கு யோசனைகளை நீங்கள் எளிதாகக் இங்கு காணலாம்.

எனவே நீங்கள் இந்த Topic Research கருவியை முயற்சிக்கவும்.

SEO Content Template

 

Semrush SEO Content Template
Semrush SEO Content Template

நீங்கள் ஒரு Beginner ஆக  இருந்தால், உங்கள் வலைத்தள  Content எஸ்சிஓ விற்கு உகந்ததா என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்கள் Content  ஐ Search Engine இல்  எவ்வாறு மேம்படுத்துவது என்பதை Semrush SEO Content Template உங்களுக்குக் காட்டுகிறது.

SEO Writing Assistant

Semrush SEO Writing Assistant

Semrush SEO Writing Assistant கருவி உங்கள் Content ஐ Top Ranking Contentகளுடன் ஒப்பிடுகிறது.

இதன் மூலமாக உங்கள் Content இல் இருக்கக்கூடிய SEO தொடர்பான தவறுகளை சரி செய்து ,உங்கள் Content ஐ Top Ranking List க்கு வர வைக்க உதவுகின்றது.

Brand Monitoring

Semrush Brand Monitoring

Semrush Brand Monitoring கருவி இணையத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிளாக் அல்லது வலைத்தளங்களை கண்காணிக்க உதவுகிறது.

இந்த கருவி மூலம் நீங்கள் கண்காணிக்கக்கூடிய பிளாக் அல்லது வலைத்தளத்தின் டொமைன் அதிகார மதிப்பெண், போக்குவரத்து, Keywords போன்றவற்றை உங்களால் கண்காணிக்க முடியும்.

Post Tracking

Semrush Post Tracking

உங்கள் வலைத்தளம்  Serach Engine  இல் தற்போது என்ன Ranking இல்  உள்ளது,  மற்றும்  உங்கள் வலைத்தளத்தின் Top Rank  Keyword  பட்டியல், Backlink எண்ணிக்கை, மொத்த social media Shares , மதிப்பிடப்பட்ட போக்குவரத்து போன்றவற்றை சரிபார்க்க Semrush Post Tracking மூலமாக கண்காணிக்க உதவுகின்றது .

Content Audit

Semrush Content Audit

உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு URL இன் Share கள் , Backlink கள், சராசரி பவுன்ஸ் Rate , search queries போன்றவற்றை சரிபார்க்க Semrush Content Audit கருவிகள் உங்களுக்கு உதவுகின்றது .

Semrush கருவியின் நன்மைகள்

  • இது ஒரு All in One எஸ்சிஓ கருவி ஆகும் , எனவே Semrush கருவி மூலம் உங்கள் வலைத்தள செயல்திறனை மேம்படுத்த 45+ அதிகமான கருவிகளை நீங்கள் இங்கு பயப்படுத்திக்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
  • உங்களுக்கு தேவையான வலைத்தளங்களின் Orgonic Traffics ,Top Keywords போன்ற விவரங்களை துல்லியமாக வழங்குகின்றது.
  • உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவற்கு இருக்கக்கூடிய சிக்கல்களை கண்டுபிடிப்பதற்கு Semrush Site Audit கருவி உதவுகின்றது.
  • உங்கள் வலைத்தளத்திற்கு தேவையான அனைத்து முக்கிய Keywords களையும் நீங்கள் ஆராய்ச்சி செய்துகொள்ளமுடியும்.
  • உங்கள் வலைத்தளத்தின் தினசரி Search Engine Ranking ஐ வெவ்வேறு Keywordsகளில் கண்காணிக்கலாம்.
  • உங்கள் போட்டியாளரின் வலைத்தள செயல்திறனை வெவ்வேறு Social Media இல் analyze செய்யலாம்.
  • உங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உருவாக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் முடியும்.

Semrush கருவியின் தீமைகள்

  • Semrush Interface ஆரம்பநிலையில் பயன்படுத்தும்போது Technical ஆக கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
  • இது அனைத்து SearchEngine Data-களையும் வழங்குவது இல்லை ஆனால் Google SearchEngine Data-களை மட்டும் வழங்குகின்றது,இதனால் மற்ற SearchEngine இல் உங்கள் வலைத்தள விவரங்களைநீங்கள் பெற இயலாது.

Conclusion

இந்த Poster மூலமாக Semrush கருவி பற்றி உங்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன் .

நீங்கள் உங்களின் வலைத்தளத்தை Search Engineஇல் மேம்படுத்த விரும்பினால் உங்களுக்கு ஏற்ற Semrush திட்டங்களை தேர்வு செய்து உங்கள் வலைத்தளத்தை Search Engineஇல் மேம்படுத்தி பயன்பெறுங்கள்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here