குறைந்த விலையில் சிறந்த வெப் ஹோஸ்டிங் சேவைகளை வழங்கக்கூடிய நம்பகமான ஹோஸ்டிங் நிறுவனங்கள் இருக்கின்றதா?என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கின்றது .
உங்களுடைய கேள்விக்கு பதில் நான் ஆம் சொன்னால் நிறைய பேர் ஆச்சரியப்படுகிறீர்கள்.
வெப் ஹோஸ்டிங் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பெரும் முன்னேற்றங்களைச் அடைந்துள்ளது .
மேலும் அவர்கள் தரமான ஹோஸ்டிங் அம்சங்களுடன் குறைந்த விலையில் ஹோஸ்டிங் சேவைகளை வழங்குகின்றது.
ஆனால் , எல்லா ஹோஸ்டிங் நிறுவனங்களும் சமமான ஹோஸ்டிங் சேவைகளை வழங்குவது இல்லை.
மேலும் எந்த ஹோஸ்டிங் நிறுவனம் மற்றும் ஹோஸ்டிங் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சிறந்த ஹோஸ்டிங் நிறுவனங்களில் குறைந்த விலையில் ஹோஸ்டிங் சேவைகளை பெறுவதற்கு வெவ்வேறு வெப் ஹோஸ்டிங் சேவைகளை நாங்கள் வாங்கி ஆராய்ச்சி செய்தோம் .
அதன்பிறகு இறுதியாக சிறந்த 10 வெப் ஹோஸ்டிங் நிறுவனங்களை தேர்வுசெய்துளோம்.
இந்த போஸ்டர் மூலமாக குறைந்த விலை ஹோஸ்டிங் சேவைகள் என்றால் என்ன?
அதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி நீங்கள் இப்போது அறிந்து கொள்ள போகிறீர்கள் .
1. Hostinger
Hostinger தனது ஹோஸ்டிங் சேவையை மிகக்குறைந்த விலையில் மாதம் $ 0.99 க்கு வழங்குகின்றது
ஆனால் இந்த குறைந்த விலை ஹோஸ்டிங் திட்டங்களை நீங்கள் பெறுவதற்கு குறைந்தப்பட்சம் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் முன்கூட்டியே நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
மேலும் உங்களுக்கு ஹோஸ்டிங்ர் வழங்கக்கூடிய ஹோஸ்டிங் சேவைகளில் திருப்த்தி இல்லையென்றால் நீங்கள் செலுத்திய பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.
இதில் நீங்கள் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ள முடியும் ,மேலும் உங்களுக்கு 1 Email Account ,ஒரு வருட இலவச SSL சான்றிதழ் வழகுங்குகின்றது.
2. DreamHost
DreamHost குறைந்த விலை ஹோஸ்டிங் திட்டம் மாதம் $2.59 இல் தொடங்குகிறது.
நீங்கள் இத்திட்டத்தை நீங்கள் பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி பதிவுபெற வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, இந்த DreamHost ஹோஸ்டிங் குறைந்த வெப் ஹோஸ்டிங் சேவைகளை நன்றாக வழங்குகின்றது.
பெரும்பாலான வலைத்தளங்களுக்கு Disk Space போதுமானதாக இருக்கும்.
நீங்கள் வேர்ட்பிரஸ் பயன்படுத்த , DreamHost உங்களுக்காக Software ரை முன்பே Install செய்து வைத்திருக்கும் .
உங்களுக்கு DreamHost ஹோஸ்டிங் சேவை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஹோஸ்டிங் சேவை வாங்கி 97 நாட்களுக்குள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது.
நீங்கள் இந்த ஹோஸ்டிங் சேவைகளில் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம் மற்றும் அன்லிமிடெட் Bandwidth ,ஒரு வருட இலவச டொமைன் பெயர்,தினசரி Data Backup ஆகியவற்றை வழங்குகின்றது .
3. Blue Host
நீங்கள் தேர்வு செய்யும் ஒப்பந்த நாட்களை பொறுத்து Bluehost மூன்று முக்கிய விலை விவரங்களை வழங்குகிறது.
குறைந்தபட்சம் மூன்று வருட ஹோஸ்டிங் திட்டங்களை உங்கள் வலைத்தளத்திற்கு தேர்வு செய்யும்போது மாதம் $2.95 க்கு குறைவான ஹோஸ்டிங் திட்டங்களை பெறமுடியும் .
ஒரு வலைத்தளத்தை நீங்கள் தொடங்க தேவையான அனைத்தும் அம்சங்களும் உள்ளது .
இதில் நீங்கள் 50 ஜிபி Disk Space ஐ பெறுகிறீர்கள், இது நீங்கள் ஹோஸ்ட் செய்யக்கூடிய ஒரு வலைத்தளத்திற்கு போதுமானதை விட அதிகமாக Disk Space உள்ளது.
மேலும் அன்லிமிடெட் Bandwidth ,ஒருவருட இலவச டொமைன் பெயர் ,5 Email Accounts ,இலவச SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.
நீங்கள் Bluehost இல் வாங்கிய ஹோஸ்டிங் சேவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது .
4. iPage
நீங்கள் iPage ஹோஸ்டிங் இல் உங்கள் வளைத்ததிற்கு ஹாஸ்டிங் வாங்க விரும்பினால் நீங்கள் குறைந்தது மூன்று வருட திட்டதை தேர்வு செய்து பணம் செலுத்த வேண்டும்.
அப்போதுதான் iPage உங்களுக்கு குறைவான ஹோஸ்டிங் சலுகையாக மாதம் $ 1.99 வழங்குகின்றது.
iPage இன் தனித்துவமான சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் குறைந்த விலை ஹோஸ்டிங் திட்டத்தில் கூட அன்லிமிடெட் வலைத்தளங்களை நீங்கள் ஹோஸ்ட் செய்து கொள்ள முடியும்.
மேலும் , நீங்கள் அன்லிமிடெட் Email Accounts , முதல் ஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர், மற்றும் அளவிடப்படாத Diskspace மற்றும் Bandwidth ,இலவச SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.
iPage வழங்ககூடிய ஹோஸ்டிங் சேவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஹோஸ்டிங்கிற்கு செலுத்திய பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பப் பெற்று கொள்வதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது .
5. Hostgator
Hostgator மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் இது வழங்கக்கூடிய குறைந்த விலை ஹோஸ்டிங் சேவையே நீங்கள் பெறுவதற்கு மூன்று ஆண்டு ஹோஸ்டிங் திட்டதை தேர்வு செய்தால் ஒரு மாதத்திற்கு INR 99 என்று மூன்று வருடத்திற்கு நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும்.
ஒரு வலைத்தளத்தைத் ஹோஸ்ட் செய்து கொள்வதற்கு தேவையான அளவிடப்படாத Disk Space மற்றும் Bandwidth வழங்குகின்றது மற்றும் 1 Email Account அளிக்கப்படுகின்றது .
45 நாட்களுக்குள் Hostgator வழங்கக்கூடிய ஹோஸ்டிங் சேவையில் உங்களுக்கு திருப்த்தி இல்லையென்றால் நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற்று கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது .
6. One .Com
One .Com குறைந்த விலையில் ஒரு மாதத்திற்கு INR 188 வலை ஹோஸ்டிங் சேவையே வழங்குகின்றது.
ஆனால் இங்கு நீங்கள் ஹோஸ்டிங் சேவையே வாங்குவதற்கு முன்பு அவர்களிடமிருந்து ஒரு டொமைன் பெயரை வாங்கவேண்டும் வெறும் ஹோஸ்டிங் திட்டத்தை மட்டும் உங்களால் வாங்க முடியாது.
அதுமட்டுமின்றி உங்களிடம் ஏற்கனவே டொமைன் பெயர் இருந்தால், அதை One.Com மூலம் பயன்படுத்த முடியாது.
ஒரு வலைத்தள உரிமையாளருக்குத் தேவையான அனைத்து முக்கிய அம்சங்களும் One .Com இல் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம் ஆனால் , சில அம்சங்கள் இல்லை.
குறிப்பாக, பெரும்பாலான ஹோஸ்டிங் சேவைகள் பொதுவாக வழங்கக்கூடிய வேர்ட்பிரஸ் One Click Install இதில் வழங்குவது இல்லை , இதில் வழங்கப்பட்டுள்ள வலைத்தள பில்டர் ஐந்து பக்கங்களை மட்டுமே உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.
இவற்றின் ஹோஸ்டிங் சேவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஹோஸ்டிங் வாங்கி 15 நாட்களுக்குள் உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது .
இதில் ஒரு வலைத்தளம் ஹோஸ்ட் செய்துகொள்ள முடியும் ,மேலும் அளவிடப்படாத Bandwidth ,100 Email Account ,முதல் ஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்,இலவச SSL சான்றிதழ்,தினசரி Data Backup ஆகிய சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.
7. Domain .com
Domain .com வழங்கக்கூடிய ஹோஸ்டிங் விலை நிர்ணயத்தை மற்ற ஹோஸ்டிங் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது எந்த ஒரு ஒளிவுமறைவின்றி உண்மையானதை வழங்குகின்றது.
அதே நேரத்தில் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழங்கக்கூடிய விலை குறைவான ஹோஸ்டிங் திட்டங்களை பார்க்கும் போது இதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கின்றது.
ஒரு மாதத்திற்கு $ 3.75 நீங்கள் செலுத்த வேண்டும்.
One .Com போலவே இங்கும் நீங்கள் டொமைன் பெயரை வாங்காமல் ஹோஸ்டிங் திட்டத்தை மட்டும் வாங்க முடியாது .
இவர்கள் வழங்கக்கூடிய ஹோஸ்டிங் சேவைகளில் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நீங்கள் ஹோஸ்டிங்க்கிற்கு செலுத்திய பணத்தை 30 நாட்களில் திரும்பப் பெற்று கொள்வற்கு உத்தரவாதம் அளிக்கின்றது .
Domain .com உங்களுக்கு வழங்கக்கூடிய குறைந்த விலை ஹோஸ்டிங் திட்டத்தில் ஒரு வலைத்தளத்தை உங்களால் ஹோஸ்ட் செய்து கொள்ளமுடியும் .மேலும் அளவிடப்படாத அலைவரிசை & சேமிப்பு இடம் மற்றும் 1 Email Account ,இலவச SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.
மூன்று வருட ஹோஸ்டிங் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யும்போது மாதம் $2.49 குறைந்த விலை திட்டத்தை InMotion உங்களுக்கு வழங்குகின்றது.இதுவே நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வருட ஹோஸ்டிங் திட்டதை பெறும்போது விலை சற்று அதிகமாக இருக்கின்றது
InMotion இலவச வலைத்தள இடமாற்றங்களையும் வழங்குகிறது நீங்கள் வேறு ஹோஸ்டிங் Server இல் உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்து இருந்தால் அங்கு இருந்து InMotion ஹோஸ்டிங்க்கிற்கு இடமாற்றம் செய்யவிரும்பினால் மற்ற சில ஹோஸ்டிங் நிறுவனங்களில் நீங்கள் இதற்கு பணம் செலுத்த வேண்டும் ஆனால் InMotion உங்களுக்கு இலவசமகா செய்து தருகின்றது
ஒட்டுமொத்தமாக, InMotion அதன் விலை குறைவான திட்டத்தில் கூட நிறைய அம்சங்களை வழகுங்குகின்றது,
நீங்கள் InMotion ஹோஸ்டிங் நிறுவனத்தில் உங்கள் வலைத்தளத்திக்கான ஹோஸ்டிங் சேவையை வாங்கிய பிறகு ஏதேனும் குறைகளை கண்டால் ஹோஸ்டிங் வாங்கி 30 நாட்களுக்குள் உங்கள் பணத்தை திரும்பி பெற்றுக்கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது .
இந்த InMotion குறைந்த விலை ஹோஸ்டிங் சேவையில் ஒரு வலைத்தளத்தை நீங்கள் ஹோஸ்ட் செய்துகொள்ளலாம் மேலும் அளவிடப்படாத Bandwidth மற்றும் 1 Email Account ,ஒரு வருடத்திற்கு
இலவச டொமைன் பெயர் ,ஒரு வருட இலவச SSL சான்றிதழ் போன்ற பல சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது
9. GoDaddy
GoDaddy வழகக்கூடிய குறைவான விலை ஹோஸ்டிங் திட்டத்தை நீங்கள் பெறுவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டு ஹோஸ்டிங் திட்டங்களை நீங்கள் வாங்கவேண்டும் .
அப்போது தான் நீங்கள் ஒரு மாதத்திற்கு INR 99.00 செலுத்த முடியும் .ஆனால் ஒரே நேரத்தில் மூன்று ஆண்டு ஹோஸ்டிங் திட்டதிற்கான பணத்தை முன்கூட்டியே வழங்கவேண்டும்.
30 நாட்களுக்குள் GoDaddy இல் நீங்கள் வாங்கிய ஹோட்ட்டிங் சேவைகளில் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் ஹோஸ்டிங்க்கிற்கு வழங்கிய பணத்தை திரும்பப் பெற்று கொள்வதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது.
GoDaddy வழங்கக்கூடிய குறைந்த ஹோஸ்டிங் திட்டத்தில் வெப் ஹோஸ்டிங்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகின்றது .
இந்த GoDaddy திட்டத்தில் ஒரு வலைத்தளத்தை உங்களால் ஹோஸ்ட் செய்து கொள்ளமுடியும் மேலும் அளவிடப்படாத Bandwidth ,1 Mail Account ,இலவச டொமைன் பெயர் போன்ற சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.
10. InterServer
InterServer முதல் மாத ஹோஸ்டிங் திட்டத்திற்கு மட்டும் வெறும் $ 2.50 க்கு பெற்றுக்கொள்கின்றது.
அதன் பின் ஒரு வருட திட்டத்திற்கு $54 ,இரண்டு வருட திட்டத்திற்கு $102 ,மூன்று வருட திட்டத்திற்கு $144 என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.
InterServer ஹோஸ்டிங் சேவைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஹோஸ்டிங்க்கிற்கு செலுத்திய பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பப் பெற்று கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது .
இந்த InterServer குறைந்த விலை ஹோஸ்டிங்கில்நீங்கள் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கு அளவிடப்படாத Bandwidth & சேமிப்பு இடத்தை வழங்குகின்றது.
மேலும் ஒரு Email Account ,One Click WordPress Install மற்றும் வாராம் தோறும் இலவச Data Backup போன்ற பல அம்சங்களை வழங்குகின்றது .