Top 10 VPS Hosting Provider in Tamil

0
46

உங்கள் வலைத்தளத்தை முதலில் தொடங்கும்போது Shared ஹோஸ்டிங் திட்டதை தேர்வு செய்வீர்கள்.

அதன் பிறகு உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய போக்குவரத்தை அடிப்படியாக கொண்டு அடுத்த Level ஹோஸ்டிங் திட்டங்களை தேர்வு செய்வீர்கள்.

பெரும்பாலான மக்கள் Shared ஹோஸ்டிங் திட்டத்திற்கு பிறகு VPS ஹோஸ்டிங் சேவையே தேர்வு செய்கின்றனர்.

ஹோஸ்டிங் நிறுனவங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு இருக்கின்றது.

அதுபோலவே நிச்சயமாக, ஒவ்வொரு ஹோஸ்டிங் நிறுவனமும் ஒரே மாதிரியான ஹோட்ஸ்டிங் சேவைகளை வழங்குவது இல்லை .

சில ஹோஸ்டிங் நிறுவனங்கள் குறைந்த விலையில் வி.பி.எஸ் ஹோஸ்டிங் சேவையே வழங்குகின்றன .

எனவே ஒரு VPS ஹோஸ்டிங்கை நீங்கள் தேர்வு செய்வதற்க்கு முன்பு விலை நிர்ணயம் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்களை பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும்.

நாங்கள் இந்த போஸ்டரில் சிறந்த 10 VPS ஹோஸ்டிங் நிறுவனங்களை பற்றி நன்கு ஆராய்ந்து உங்களுக்கு அதை பற்றி விவரித்து உள்ளம்.

Hostinger VPS ஹோஸ்டிங்

Hostinger , மிக குறைவான விலையில் ஹோஸ்டிங் சேவைகளை வழங்கக்கூடிய ஒரு சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும்.

Hostinger Shard ஹோஸ்டிங் திட்டம் மாதத்திற்கு ரூ.59 என குறைந்த விலையில் தொடங்குகின்றது.

அதுபோலவே அவற்றின் VPS ஹோஸ்டிங் திட்டம் குறைந்த விலையில் மாதம் ரூ.285 க்குக் வழங்குகின்றது.

Hostinger அடிப்படை VPS திட்டத்தின் மூலம், 1 ஜிபி RAM , 20 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு, 1 TB Bandwidth மற்றும் 1 சிபியு கோர் ஆகியவற்றை உங்கள் வலைத்தளத்திற்கு நீங்கள் பெற்று கொள்ளமுடியும் .

Hostinger VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • Hostgator லினக்ஸ் மற்றும் விண்டோஸ் வி.பி.எஸ் சேவைகளை வழங்குகின்றது.
  • இது பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களை VPS ஹோஸ்டிங் திட்டத்தில் அளிக்கின்றது.

Hostinger VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி ஆதரவை வழங்குவது இல்லை.
  • வலைத்தள இயக்க நேர சதவீதம் குறைவு.

Hostgator VPS ஹோஸ்டிங்

Hostgator ஒரு சிறந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனமாகும் , இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் விலைக்கு ஏற்ப சிறந்த வலைத்தள Software களை வழங்குகிறது, இதில் எண்ணற்ற இலவச வெப் மேம்பாட்டு கருவிகள் உள்ளன.

Hostgator சிறு வணிகங்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை வழங்குகிறது.Hostgator இன் சிறந்த அம்சங்களில் ஒன்று அது வழங்கக்கூடிய Bandwidth மற்றும் வாடிக்கையாளர் சேவை. அடிப்படைVPS ஹோஸ்டிங் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ .699 செலவாகும், மேலும் இத்திட்டத்தில் 2 ஜிபி RAM , 2 கோர் சிபியு, 120 ஜிபி சேமிப்பு மற்றும் மிக உயர்ந்த 1.5 டிபி Bandwidth ஆகியவை வழங்கப்படுகின்றது .

Hostgator VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • குறைந்த விலை VPS ஹோஸ்டிங் திட்டத்தில் 120 ஜிபி சேமிப்பு இடத்தை வழங்குகின்றது.
  • உங்கள் வலைத்தளத்தை 99.99% இயக்க நேரத்தில் செய்லபடுகின்றது.

Hostgator VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • நீங்கள் ஆரம்பத்தில் வாங்கக்கூடிய ஹோஸ்டிங் திட்டத்தின் விலை குறைவாக இருக்கும் ,ஆனால் அதை மறுபடியும் புதுப்பிக்கும் போது விலை அதிகமாக இருக்கின்றது.
  • Hostgator மற்ற வலை ஹோஸ்டிங் நிறுவனங்களை போல இலவசமாக டொமைன் பெயரை வழங்குவதில்லை.

Bluehost VPS ஹோஸ்டிங்

Bluehost உண்மையில் உலகளவில் இருக்கக்கூடிய முதல் 20 மிகப்பெரிய வெப் ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான டொமைன்களை வழங்குகிறது.

Shared ஹோஸ்டிங் முதல் Dedicated ஹோஸ்டிங் வரை தரமான பல்வேறு திட்டங்களை Bluehost வழங்குகிறது.

Bluehost இன் நுழைவு VPS ஹோஸ்டிங் திட்டம் 1TB Bandwidth , 2 CPU கோர்கள், 2 ஜிபி RAM மற்றும் 30 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பிடத்தை வழங்குகிறது.

இந்த அடிப்படை VPS ஹோஸ்டிங் திட்டம் உங்கள் வலைத்தளத்திற்கு 1 ஐபி முகவரியை மட்டுமே அனுமதிக்கிறது.

மேலும் நீங்கள் இந்த Bluehost இன் நுழைவு VPS ஹோஸ்டிங் திட்டத்திற்கு மாதம் $18.99 செலவிட வேண்டும்.

Bluehost VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • 99.98% வலைத்தள இயக்க நேரத்தை வழங்குகிறது.
  • அனைத்து ஹோஸ்டிங் திட்டங்களும் இலவச டொமைன் பெயர் உடன் வருகின்றது.

Bluehost VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • உங்கள் வலைத்தளத்திற்கு 1TB Bandwidth மட்டுமே  இத் திட்டத்தில் வழங்கப்படுகின்றது .
  • உங்கள் வளைத்ததிற்கு 1 Dedicated ஐபி முகவரி மட்டும் அளிக்கின்றது.

Dreamhost VPS ஹோஸ்டிங்

Dreamhost , ஒரு LA- அடிப்படையிலான வெப் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவு நிறுவனமாகும்

Dreamhost ஒரு மாதத்திற்கு $10 க்கு ஒரு அடிப்படை VPS ஹோஸ்டிங் திட்டத்தை வழங்குகிறது, இதில் 1 ஜிபி RAM , 30 ஜிபி எஸ்.எஸ்.டி சேமிப்பு, அன்லிமிடெட் வலைத்தளங்கள், அன்லிமிடெட் Email Accounts மற்றும் இலவச எஸ்.எஸ்.எல் சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது .

Dreamhost ஒரு நம்பகமான ஹோஸ்டிங் நிறுவனமாக இருக்கின்றது , இது சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு சேவையே வழகுங்குகின்றது.

Dreamhost VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • அன்லிமிடெட் Email Accounts மற்றும் டொமைன்களை வழங்குகிறது.
  • உங்கள் வலைத்தளத்திற்கு அன்லிமிடெட் Bandwidth ஐ வழங்குகின்றது.

Dreamhost VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • Live Chat மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழகுங்வதில்லை.
  • அடிப்படை VPS ஹோஸ்டிங் திட்டத்தில் 30 ஜிபி சேமிப்பு இடத்தை மட்டுமே வழங்குகின்றது.

GoDaddy VPS ஹோஸ்டிங்

GoDaddy 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு மிகப்பெரிய வெப் ஹோஸ்டிங் நிறுவனமாகும் ,இது உலகளவில் 71 மில்லியனுக்கும் அதிகமான டொமைன்களை வழங்கியுள்ளது மேலும் 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது .

GoDaddy விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான VPS திட்டங்களை வழங்குகிறது. அடிப்படை VPS திட்டத்திற்கு மாதம் $19.99 செலுத்தவேண்டும் .இத்திட்டத்தில் CPanel Root Access , அன்லிமிடெட் Bandwidth , 40 ஜிபி Disk Space , 2 ஜிபி RAM மற்றும் 1 சிபியு கோர் ஆகிய அம்சங்களை வழங்குகின்றது .

GoDaddy VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • உங்கள் வலைத்தளத்திற்கு அன்லிமிடெட் Bandwidth ஐ வழக்குகின்றது.
  • லினக்ஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய இரண்டு OS களுக்கும் VPS ஹோஸ்டிங் சேவையே வழங்குகின்றது.

GoDaddy VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • உங்களுக்கு GoDaddy ஹோஸ்டிங் சேவை பிடிக்கவில்லை என்றால் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் போல money-back guarantee ஐ வழங்குவதில்லை .
  • GoDaddy தனது வாடிக்கையாளர்களுக்கு Live Chat மற்றும் டிக்கெட் மூலமாக ஆதரவை வழங்குவதில்லை.

A2 VPS ஹோஸ்டிங்

A2 ஹோஸ்டிங்கை மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஒரு தரமான ஹோஸ்டிங் நிறுவனமாகும்.

A2 ஹோஸ்டிங்கின் அடிப்படை VPS ஹோஸ்டிங் திட்டத்திற்கு ஒரு மாதம் நீங்கள் செலுத்தவேண்டிய பணம் . 25.00 இல் தொடங்குகிறது, இதில் 4 ஜிபி RAM , 150 ஜிபி சேமிப்பு, 2 சிபியு கோர்கள் மற்றும் இலவச எஸ்எஸ்எல் மற்றும் எஸ்எஸ்டி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது .

A2 VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • சிறந்த வாடிக்கையாளர் சேவையே வழங்குகின்றது.
  • உங்களுக்கு A 2 ஹோஸ்டிங் சேவை பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்வதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது.

A2 VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • A2 ஹோஸ்டிங் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போல ஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயரை வழங்குவதில்லை .
  • இது 99.95% வலைத்தள இயக்கநேரத்தை வழங்குகின்றது மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் இதை ஒப்பிடும் போது குறைவாக இருக்கின்றது.

InMotion VPS ஹோஸ்டிங்

உங்கள் வலைத்தளத்திற்கு VPS ஹோஸ்டிங் சேவையே தேர்வு செய்ய போகிறீர்கள் என்றால் என்று InMotion சிறந்த தேர்வாகும்.

InMotion VPS ஹோஸ்டிங் திட்டத்தில் நீங்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் சேவைகளை பெறுவீர்கள்.

InMotion அடிப்படை VPS ஹோஸ்டிங் திட்டத்தில் 4 ஜிபி RAM , 75 ஜிபி சேமிப்பு மற்றும் 4 டிபி Bandwidth மற்றும் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்களை வழங்குகின்றது.

இத்திட்டத்திற்கு ஒரு மாதம் $17.99 என்று குறைந்தவிலையில் ஹோஸ்டிங் சேவையே பெறுவதற்கு நீங்கள் 6 மாத திட்டத்தை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தவேண்டும்.

InMotion VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • இந்த VPS ஹோஸ்டிங் திட்டத்தில் அன்லிமிடெட் CPU கோர்கள், டொமைன்கள் மற்றும் Email Account கள் வழங்கப்படுகின்றது.
  • நீங்கள் தேர்ந்துஎடுக்கும் 6-12 மாத VPS ஹோஸ்டிங் திட்டங்களுடன் இலவச டொமைன் பெயர் வழங்குகின்றது.

InMotion VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • நீங்கள் மிகவும் உயர்ந்த VPS ஹோஸ்டிங் திட்டங்களை தேர்வு செய்யும்போது உங்களுக்கு விலை அதிகமாக இருக்கும்.
  • InMotion ஐ மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 99.97% சராசரி இயக்க நேரத்தை வழங்குகின்றது.

Namecheap VPS ஹோஸ்டிங்

Namecheap இரண்டு வகையான VPS ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றது .அவை Pulsar(ரூ.585.94/ மாதம்) மற்றும் Quasar(ரூ.1032.09 / மாதம்).

இந்த இரண்டு திட்டங்களும் பொதுவாக இலவச டொமைன், Data Backup , Full Root Access மற்றும் 30-day money-back guarantee ஐ வழங்குகின்றது.

குறைந்த விலை VPS ஹோஸ்டிங் Pulsar திட்டத்தில் 2 CPU கோர்கள்,2 ஜிபி RAM ,40 ஜிபி சேமிப்பு 1000 ஜிபி அலைவரிசை வழங்கப்படுகின்றது.

Namecheap 24/7 நேரம் வாடிக்கையாளர்களுக்கு Live மற்றும் Email Chat மூலமாக ஆதரவை வழங்குகின்றது.

உங்களுக்கு தொலைபேசி ஆதரவு முக்கியம் என்றால் நீங்கள் வேறொரு ஹோட்ஸ்டிங் சேவையே தேர்வு செய்யவும் .

ஏனெனில் Namecheap தற்போது தொலைபேசி ஆதரவை வழங்குவது இல்லை.

Namecheap VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • இத்திட்டத்தில் இலவச டொமைன் பெயர் வழங்கப்படுகின்றது .
  • உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Data களை இலவசமாக Backup செய்துகொள்ளமுடியும்.

Namecheap VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • Namecheap தனது சிறந்த போட்டியாளர்களைக் காட்டிலும் குறைந்த Bandwidth மற்றும் RAM வழங்குகிறது.
  • நீங்கள் வாடிக்கையாளர் சேவையே அணுகுவதற்கு தொலைபேசி ஆதரவு வழங்கப்படவில்லை.

Hostpapa VPS ஹோஸ்டிங்

Hostpapa வின் VPS ஹோஸ்டிங் சிறப்பு அம்சங்கள் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மோசமானவை அல்ல ஏனென்றால் இதில் நீங்கள் அன்லிமிடெட் டொமைன் மற்றும் Mail Account ஐ பெறுவீர்கள், மேலும் 99.97% வலைதள இயக்க நேரம் மற்றும் Data Backup ஐ வழங்குகின்றது .இந்த Hostpapa VPS ஹோஸ்டிங் திட்டங்கள் குறைந்தபட்சம் மாதம் $ 35.88 செலவாகும்.

Hostpapa VPS ஹோஸ்டிங் நன்மைகள்

  • இத்திட்டத்தில் தனித்துவமான சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் 4 CPU கோர்கள் வழங்கப்படுகின்றது .
  • நீங்கள் அன்லிமிடெட் டொமைன்கள் மற்றும் Email Account களை உபயோகித்து கொள்ளமுடியும்.

Hostpapa VPS ஹோஸ்டிங் தீமைகள்

  • நீங்கள் VPS ஹோஸ்டிங் திட்டதை முதலில் வாங்கும்போது விலை குறைவாக வழங்கப்படுகின்றது.
  • அதன்பிறகு நீங்கள் வாங்கிய ஹோஸ்டிங் திட்டத்த்தை புதுப்பிக்கும் போது விலை அதிகமா வழங்குகின்றது.
  • இந்த VPS ஹோஸ்டிங் திட்டத்தில் இலவச Data Backup வழக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here