Top 15 Ways to Make Money Online in Tamil

ஆன்லைன் மூலமாக பணம் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கின்றது?

ஆன்லைனில் 100% நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய தளத்தை பொறுத்தே அது அமையும். ஏனென்றால் சில போலியானவையும் இருக்கின்றது .

நான் இப்போது உங்களுக்கு எப்படி ஆன்லைனில் 100% நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை பற்றிய தகவலை கூறப்போகிறேன். எனவே உங்கள் நேரத்தில் ஒரு 5 நிமிடத்தை ஒதுக்கி இந்த போஸ்ட்டை முழுவதுமாக படியுங்கள். அதன்பிறகு நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

15 ways to Make Money Online in Tamil

1.Freelancing

Freelancing என்பது உங்களுக்கு தெரிந்த எந்த வேலையாக இருந்தாலும்

அதை முதலீடாக கொண்டு அந்த வேலை யாருக்குத் தேவையோ அவர்களை உங்களுடைய Client ஆக பயன்படுத்தி அவர்களுக்கு அந்த வேலையை நீங்கள் செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கக்கூடிய வழியாகும்.

நீங்கள் Freelancing  வேலை செய்வதற்கு இணையத்தில் பல நம்பகமான வலைத்தளங்கள் உள்ளன. அவை  utfiverr.com,upwork.co m,freelancer.com,worknhire.com ஆகும் .

நீங்கள் எந்த வலைத்தளத்தில் வேலை பார்க்கப் போகிறீர்களோ அந்த வலைதளத்தில் முதலில் உங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும்.

அதன்பிறகு உங்களுக்கு எந்த வேலை தெரியுமோ அந்த துறையை தேர்வு செய்யவும் அது ஒன்று அல்லது அதற்கு மேலாக இருந்தாலும் சரி.இதன்பிறகு நீங்கள் தேர்வு செய்த Freelancing  வலைதளம் மூலமாக சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

2. Affiliate Marketing

Affiliate Marketing என்பது  ஒருதவங்களுடைய  Product ஐ நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து  விற்று கொடுத்தால்  உங்களுக்கு Commision Amount தரப்படும் .

அந்த Product  இன் Owner அதன்  விலையே பொறுத்து Commison Amount  தருவார். எனவே Commision  Amount Product இன் விலையே  பொறுத்து மாறுபடக்கூடியது

இதை தான் Affiliate Marketing என்று கூறுகிறார்கள்.

ஆன்லைன் பொருத்தவரை Affiliate Marketing செய்வதற்கு நிறைய நம்பகமான நிறுவனங்கள் இருக்கின்றது.

அதில் சிறந்த ஒரு பத்து வலைதளத்தை மற்றும் நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன்(Amazon Associates,Awin,CJ Affiliate,ShareASale,Clickbank,JVZoo,Impact,Shopify,envanto, Meshoo)

உதாரணமாக Amazon Associates நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம் .நீங்கள் Amazon நிறுவனத்தில் உங்கள் கணக்கை முதலில் Open செய்ய வேண்டும்.

அதன் பிறகு அவர்களுடைய Product இல் நீங்கள் எந்த Product யை

மக்களிடம் கொண்டு செல்ல போகிறீர்களோ என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இப்போது Amazon Product Laptop தேர்வு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தேர்வு செய்த Product இன் link யை  Copy செய்து கொள்ளவும்.

அதன் பிறகு நீங்கள் Copy செய்த link யை  Social Media அல்லது உங்களுடைய சொந்த Website ஷேர் செய்ய வேண்டும்.

நீங்கள் ஷேர் செய்த Link இன் மூலமாக அந்த Laptop யாராவது வாங்கினால் உங்களுக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து கமிஷன் கொடுக்கப்படும்.

3.Amazon Kindle

உங்களுக்கான  Passive Income நீங்கள் அமைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு சிறந்த வழி Amazon Kindle ஆகும்.

Passive Income  என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா?

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு தடவை  செய்த வேலைக்கு உங்களுடைய வாழ்க்கை முழுவதும் பணம் வந்து கொண்டே இருப்பது  Passive Income  எனப்படும்.

Amazon Kindle  என்பது ஒரு சிறிய நூலகம் எனப்படுகிறது. இந்த சிறிய நூலகத்தில் இருந்து நமக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி கொள்ள முடியும்.

உங்களுக்கு புத்தகம் எழுதுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தால், நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதி இந்த Amazon Kindle  மூலமாக Publish செய்யலாம்.

எப்போது எல்லாம் உங்களுடைய புத்தகம் இந்த Amazon Kindle  ல் விற்கப் படுகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கு Amazon Kindle  நிறுவனத்தில் இருந்து Comission Aount  கொடுக்கப்படும்.

4.Online tutoring

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறந்த நிபுணராக இருந்தால், ஆன்லைனில் மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். .

நீங்கள் Vedantu.com, MyPrivateTutor.com, BharatTutors.com, tutorindia.net இந்த வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு தெரிந்த பாடங்களை ஆன்லைன் வகுப்புகளாக உங்களுக்கு கிடைக்ககூடிய நேரங்களில் எடுத்து பணம் சம்பாதிக்க முடியும்.

இதற்கு நீங்கள் இதில் ஏதேனும் ஒரு வலைதளத்தை தேர்வு செய்து உங்களுடைய முழு விவரத்தையும் பதிவு செய்து ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் இணைந்துள்ள வலைதளத்திலிருந்து உங்களுக்கு Training கொடுக்கப்படும். நீங்கள் அந்த Training யை   வெற்றிகரமாக செய்து முடித்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் அதன் பிறகு நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

5.Social media management, strategy

நாம் அனைவரும் நம்முடைய நேரங்களை  அதிகமாக செலவிட கூடிய இடங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்தால் Social Media தான். இதை யாராலும் கண்டிப்பாக மறக்க முடியாது.

ஆனால் நான் இப்பொழுது இதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும் என்று சொல்லுகிறேன் அதை உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது உண்மைதான்.

நாம் அனைவரும் உபயோகப் படுத்தக்கூடிய பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் மூலமாக நாம் நம்முடைய நேரத்தை நண்பர்கள் மற்றும் நமக்கு முகம் தெரியாத நபர்களுடன் நம்முடைய நேரத்தைசெலவு செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமக்கே தெரியாமல் நிறைய மக்கள் இதன் மூலமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி என்பது பற்றி தான் நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

பல நிறுவனங்கள் மற்றும்  பிராண்டுகள் அவர்களுடைய Product யை  மக்களிடம் கொண்டு செல்வதற்காக Social Media வில் அதிகம் Follwers இருக்கக்கூடிய நபர்களிடம் பணம் கொடுத்து அவர்களுடைய  Social Media  பக்கத்தில் போஸ்டர் மற்றும் வீடியோ மூலமாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

இதன் மூலமாக அந்த நிறுவனம் மற்றும் பிராண்டுகளுக்கு என்ன பயன் என்று யோசிக்கிறீர்களா? மிகக் குறைந்த நேரத்திலேயே அவர்களுடைய Product யை  மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

உங்களுடைய Social Media Page ல் அதிகமான போலவர்ஸ் நீங்கள் வைத்திருந்தால் பல நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள்   எனவே முன்வந்து உங்களை தொடர்பு கொண்டு அவர்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பணம் கொடுப்பார்கள்.

எனவே நீங்கள் தினசரி உபயோகப் படுத்தக்கூடிய Social Media வில் இருந்தும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

6.Web Designing

நாம் இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் வணிக வளாகங்கள் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. அதேபோல் அனைத்து வணிக உரிமையாளர்களும் Web Designer ஆகவும்  இல்லை.

இப்படி இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சிறிய வணிகங்கள் முதல் பெரிய வணிகங்கள் வரை அவர்களுடைய   சொந்த வலைதளத்தை  அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கு  Web Designing பண்ணுவதில் ஆர்வம் அதிகம் இருந்தால் நீங்களும் உங்களை சுற்றியுள்ள சிறிய வணிக வளாகங்களை தொடர்பு கொண்டு அல்லது ஆன்லைனில் இருக்கக்கூடிய freelance Website  மூலமாக  பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

7. Online Store

நீங்கள் இப்போது ஏதேனும் ஒரு சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் உங்களுடைய பொருட்களை  ஆன்லைன் மூலமாக விற்று பணம் சம்பாதிக்க முடியும்.

அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்கு சொந்தமான  ஒரு வலை தளத்தை முதல்  உருவாக்க வேண்டும்.

இதை நீங்கள் ஒரு Web Development செய்யக்கூடிய நபரிடம் செய்து வாங்கிக் கொள்ளவும். இதற்காக சில பணம் செலவிட வேண்டியிருக்கும்.

பிறகு உங்களுடைய சொந்த வலைதளம் மூலமாக  பொருட்களை  மக்களிடம் நேரடியாக விற்று உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்..இதை ஆன்லைன் ஸ்டோர் என்கிறார்கள்.

உங்களுக்கு சொந்த வலைதளத்தை உருவாக்கி பொருட்களை விற்க விருப்பம் இல்லை என்றால்  நீங்கள் Amazon மற்றும் Flipkart நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்களுடைய பொருட்களை  விற்கலாம். அதற்கு  நீங்கள் Amazon மற்றும் Flipkart  நிறுவனத்திற்கு ஒவ்வொரு பொருளின் விற்பனைக்கும் Commission கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே உங்களுடைய சொந்த தொழில் மூலமாக Online மற்றும் Offline-ல்  உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

Online மூலமாக நீங்கள் பணம் சம்பாதிப்பது பயன் என்ன என்று யோசிக்கிறீர்களா ?உங்களுடைய பொருட்களை உலகெங்கும் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல முடியும்.

இதுவே நீங்கள் Offline-ல் சம்பாதித்தால் உங்களை சுற்றியுள்ள நபர்களிடம் மட்டும் உங்களுடைய பொருளை கொண்டு சேர்க்க முடியும்.

8. Language translating

உங்களுக்கு  ஆங்கிலத்தைத தவிர வேறு மொழி தெரிந்து இருந்தால் உங்களால் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.

பொதுவாகவே இதை மொழிபெயர்ப்பு வேலை என்று சொல்லுவார்கள்.இந்த வேலையை செய்வதற்கு பல நம்பகமான வலைதளங்கள் இணையத்தில் இருக்கின்றது.

என்னென்ன மொழிகளில் எல்லாம் இந்த வேலை அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால் ஸ்பானிஷ்,பிரெஞ்சு,ஜெர்மன்,அரபு எதற்காக இந்த மொழிகள் தெரிந்திருந்தால் சம்பாதிக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா?

பொதுவாக ஆன்லைனில் ஒரு ஆவணங்களை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு  நிறைய வலைத்தளங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றன.

இந்த மொழிபெயர்ப்பு வேலை Freelancer.in, Fiverr.com, worknhire.com ,Upwork.com ஆகிய வலைதளங்களில் அதிகமாக தேவைப்படுகிறது.

இனி உங்களுக்கு தெரிந்த கூடுதல் மொழியை வைத்து உங்களால் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க முடியும்.

9. Content Writing

இப்ப நாம வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய Digital  உலகில்  எந்தவிதமான விஷயங்களை எல்லாம் கேட்கிறோமோ,பார்க்கிறோமோ,தெரிந்து கொள்கிறோமோ இவை அனைத்துமே Content ஆகும்.

உதாரணமாக  இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிற இந்த Post கூட ஒரு Content  தான்.

Content Writing என்பது Unique இருக்க வேண்டும். இதை நீங்கள் மற்றவர்களிடம் இருந்து  அப்படியே Copy செய்யக்கூடாது.

நீங்கள் ஒரு விஷயத்தை முழுவதுமாக இணையதளத்தில் தேடி அதைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு பிறகு உங்களுக்கு புரிந்ததை  நீங்கள் உங்களுடைய சொந்த வார்த்தைகளில் சுயமாக எழுதுவது  சரியான Content Writter வேலையாகும்.

Content Writing பற்றி நன்கு இணையதளம் வாயிலாக கற்றுக் கொண்டு அதன் பிறகு நீங்கள் உங்களுக்கான Content Writer  வேலையை வலைதளத்தில் தேடுங்கள்.

நிச்சயமாக Content Writing வேலை மூலமாக உங்களால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும்.

10. YouTube

YouTube மூலமாக எப்படி பணம் சம்பாதிப்பது என்பதைப்பற்றி நாம் இப்போது பார்க்கலாம்?

YouTube ல் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது அல்ல,ஆனால் நீங்கள் சரியான முறையில் உழைத்தால் கண்டிப்பாக உங்களால் YouTube மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் .

ஒரு YouTube Channel ஆரம்பிப்பதற்கு உங்களுடைய Mailid இருந்தால் போதுமானது.

உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவர்களுக்கு வீடியோ மூலமாக சொல்லிக் கொடுப்பதனால் உங்களால் YouTube ல் பணம் சம்பாதிக்க முடியும்.

கண்டிப்பாக நீங்கள் தினசரி ஒரு வீடியோ கட்டாயம் போட வேண்டும். அதன் பிறகு அந்த வீடியோவை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஷேர் செய்ய வேண்டும்.

யாரெல்லாம் உங்கள் வீடியோவை பார்த்து உங்களுடைய சேனலை Subscribe செய்கிறார்களோ,அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க  உங்களுடைய வருமானம் ஆரம்பித்துவிடும்.

அதன்பிறகு கூகுள் நிறுவனம் உங்களுடைய சேனலில் விளம்பரங்களை நீங்கள் போடக்கூடிய வீடியோ Content ஏற்றவாறு விளம்பரங்கள் செய்யப்படும்.

உங்கள்  YouTube Channel  விளம்பரங்கள் வர தொடங்கிய உடன் தான் உங்களுக்கும் வருமானம் வரும் அதுவரை உங்களுக்கு வருமானம் வராது.

YouTube Channel  ஒரு Passive Income  ஆகும். நீங்கள் இப்போது ஒரு  YouTube Channel  ஆரம்பித்து உங்களுக்கு பிடித்த வீடியோக்களை போட ஆரம்பியுங்கள் அதன் பிறகு நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்

11. Blogging

Blogging மிகவும் பிரபலமான ஆன்லைன் வேலைகளில் ஒன்றாகும். இதன் மூலமாக நிறைய பேர் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. பிளாக்கிங்  அப்படி என்றால் என்ன இது மூலமாக எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

Blogging வேலையை நீங்கள் தொடங்குவதற்கு எந்த ஒரு முதலீடும் தேவையில்லை இது முற்றிலும் இலவசமாகும்.

இப்போது Blogging என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம்.நாம் அனைவரும் நமக்கு தேவையான விஷயத்தை தெரிந்துகொள்வதற்காக Google ல் சென்று பார்க்கிறோம்.

உதாரணமாக, How to make money online என்று Google ல் நீங்கள் Type செய்து Search பண்ண தொடங்கியவுடன்  அதன் தொடர்புடைய நிறைய வலைத்தளங்கள் உங்களுக்கு தோன்றும்.

நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எதற்காக ஒரு தலைப்பிற்கு இவ்வளவு வலைதளங்கள் இருக்கின்றது என்று !

நீங்கள் அதில் ஒவ்வொரு வலைத்தளமாக சென்று பார்க்கும் போது உங்களுக்கான பதில் ஒவ்வொரு வலைத்தளத்திலும் வெவ்வேறாக கொடுக்கப்பட்டிருக்கும் .

உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக ஆராய்ந்து அதை நீங்கள் Content ஆக எழுதி மக்களிடையே கொண்டு செல்வதற்காக உதவக் கூடியது தான் இந்த பிளாக்கிங் ஆகும்.

நீங்கள்  Blogging ஆரம்பித்து உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை Content ஆக Post செய்வதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா?

இதற்கு Google நிறுவனம் பணம் தருகிறது. நீங்கள் உங்களுடைய சொந்த பிளாக்கில் Content Post செய்கிறீர்கள்.

Google நிறுவனம் அவர்களுடைய விளம்பரங்களை உங்களுடைய சொந்த Blogg ல் பதிவு செய்வார்கள். அதற்காகத்தான் Google நிறுவனம் உங்களுக்கு பணம் தருகிறது.

இதை தொடங்குவதற்கு Google நிறுவனமே அவர்களுடை blogspot.com என்ற வலைதளத்தை வழங்கியுள்ளது இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய Blog தொடங்கி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

12. Sell Photos Online

நீங்கள் ஒரு Photographer-ஆ அல்லது உங்களுக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்குமா ?அப்படி என்றால் உங்களால் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.

முதலில் நீங்கள் எந்தவிதமான போட்டோக்களை எடுக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள்(உதாரணமாக இயற்கை,சாப்பாடு.செல்லப்பிராணிகள்).

அதன்பிறகு நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோக்களை Adobestock or shutterstock என்ற இணையதளத்தில் நீங்கள் கணக்குகளை Open செய்யவும் .

நீங்கள் எடுத்துள்ள போட்டோக்களை  Adobestock or shutterstock  இணையதளத்தில் Publish செய்ய .

அதன் பிறகு அந்த நிறுவனம் அதை Release .செய்யும். Adobestock or shutterstock  என்ற வலைதளங்கள் போட்டோக்களை விற்பனை செய்கிறது.

நீங்கள் Publish செய்த போட்டோக்களை  Adobestock or shutterstock  வலைதளத்தில் அவர்களுடைய Customers வாங்கும் போது உங்களுக்கு அதற்கான Commission வழங்கப்படும்.

எனவே உங்களுக்குப் பிடித்த  Photography விஷயத்தை செய்து ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க தொடங்குங்கள்.

13. Virtual assistantship

நீங்கள் வீட்டில் இருந்தபடியே எல்லா கார்ப்பரேட் வேலைகளை செய்வதுதான்   Virtual assistantship எனப்படும்.

உதாரணமாக ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் ஒரு நபர் வேலை செய்து கொண்டிருக்கிறார், அவருக்கு அங்கு அதிகமான வேலை கொடுக்கப்படுகிறது, அந்த வேலையை அவரால் செய்ய முடியாத பட்சத்தில் அவர் Virtual assistantship ஆன்லைனில் தேர்வு செய்வார்.

அதன்பிறகு அந்த  Virtual assistantship  அவருடைய வேலையை செய்து கொடுப்பார். இதற்காக வேலை கொடுப்பவர் வேலை செய்கிற நபருக்கு சம்பளம் கொடுப்பார்.

நீங்கள் ஒரு  Virtual assistantship  வேலை செய்யத் தொடங்கப் போகிறீர்களா ? அப்படி என்றால் இப்போது நான் சில  நம்பகமான வலைத்தளங்களை கூறுகிறேன்(Upwork,freelancer,remote). நீங்கள் இந்த வலைத்தளத்தில் உங்களுடைய  கணக்குகளை முதலில் Open செய்யவும். அதன்பிறகு உங்களுடைய  Resume  பதிவு செய்யுங்கள்.

ஆன்லைனில் Virtual assistantship வேலைக்கு ஆட்களை தேடுபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். இதன் மூலம் நீங்கள் சம்பாதிக்க முடியும்

14. Online Data Entry

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க கூடிய  எளிய வழி தான் இந்த Data Entry வேலை. இந்த வேலை செய்வதற்கு உங்களுக்கு எவ்விதமான கல்வி தகுதிகள் தேவை இல்லை.

உங்களுக்கு வேகமாக Typing செய்யத் தெரியும் என்றால் இந்த வேலை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

ஆன்லைனில் இந்த Data Entry வேலையைப் பொறுத்தவரை நிறைய நம்பகமான தளங்கள் இருக்கின்றன )utfiverr.com,upwork.co m,freelancer.com,worknhire.com ). இந்த வலைதளங்களில் நீங்கள் முதலில் கணக்குகளை Open செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்களுடைய Resume Upload செய்யுங்கள்.பின்னர்  வேலை கொடுப்பவர் உங்களுடைய Resume பார்த்து  உங்களுக்கு வேலை கொடுப்பார். இதன் மூலம் நீங்கள் தினசரி பணம் சம்பாதிக்க முடியும்.

15.PTC Website

பல வலைதளங்கள் அவர்களுடைய  விளம்பரங்களை கிளிப் செய்வதற்காக உங்களுக்கு  பணம் தருகிறார்கள்.

இதில் வருமானம் அதிகமாக இருக்காது. ஆனாலும் நீங்கள் குறைந்த பட்சம் 100 பணம் சம்பாதிக்க முடியும்

இந்த மாதிரியான அனைத்து வலைத்தளங்களையும் நம்பமுடியாத ஆனால் ஒரு சில வலைத்தளங்களை நாம் நம்ப முடியும். எதற்காக வலைதளங்களில் இருக்கக்கூடிய விளம்பரங்களை கிளிக் செய்ய வைத்து பணம் கொடுக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?

உங்களைப் போல நிறைய பேர் இந்த வேலையை அவர்களுடைய வலைதளங்களில் செய்யும்போது அவர்களுக்கு பணம் கிடைக்கும்.

இதற்காகத்தான் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான வலைதளங்களை தான் PTC  வலைத்தளம் என்று கூறுகிறார்கள்.

Leave a Comment