குறைந்த விலையில் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகளை வழங்கக்கூடிய ஏராளமான ஹோஸ்டிங் நிறுவனங்கள் உள்ளது.
இருப்பினும், உங்கள் வலைத்தளத்திற்கு அதிக Performance ஐ வழங்கக்கூடிய ஹோஸ்டிங் சேவை தேவைப்படுகின்றதா , அப்படியென்றால் உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்திற்கு WP Engine ஹோஸ்டிங் சேவையே பார்க்கவும்.
WP Engine என்பது வேர்ட்பிரஸ் வலைத்தளத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனமாகும்.
WP Engine வழங்கக்கூடிய வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டதை நீங்கள் மற்ற பல ஹோஸ்டிங் நிறுவனங்களின் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டத்துடன் ஒப்பிடும்போது விலை சற்று அதிகமாக தான் இருக்கும் .
அதனால் நீங்கள் WP Engine இல் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டதை வாங்குவதற்கு முன் மற்ற ஹோஸ்டிங் திட்டத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்கவும்.
இந்த போஸ்ட்டரில் WP இன்ஜின் ஹோஸ்டிங் திட்டங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி நாங்கள் இங்கு விவரித்துள்ளோம்.
WP Engine ஹோஸ்டிங் வகைகள் மற்றும் திட்டங்கள்
இப்போது, நாம் WP Engine வழங்கக்கூடிய முக்கிய ஹோஸ்டிங் தொகுப்புகளை பற்றி பார்க்கலாம்.
இதில் உள்ள எல்லா திட்டங்களும் ஹோஸ்டிங் வழகுகின்றது , ஆனால் அவை அனைத்தும் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழங்கக்கூடிய ஹோஸ்டிங் திட்டத்துடன் ஒப்பிடும்போது சற்று விலை உயர்ந்தவை.
WP Engine ஹோஸ்டிங் STARTUP PLAN($20 ஒரு மாதத்திற்கு)
இந்த ஹோஸ்டிங் திட்டதை நீங்கள் தேர்வு செய்யும் போது ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்துகொள்ளமுடியும் மற்றும் ஒரு மாதத்திற்கு 25,000 வரை பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலும் நீங்கள் 10ஜிபி சேமிப்புஇடம் ,50ஜிபி Bandwith ,ஒரு இலவச SSL சான்றிதழ், Global சி.டி.என் Access மற்றும் சில முக்கிய அம்சங்களையும் பெறுவீர்கள்.
நீங்கள் இந்த ஹோஸ்டிங் திட்டத்தில் கூடுதலாக வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்யவதற்கு தள்ளுபடி விலையில் Extra ஹோஸ்டிங் சேவையே வாங்கமுடியும் .
WP Engine ஹோஸ்டிங் GROWTH PLAN ($76 ஒரு மாதத்திற்கு)
நீங்கள் START PLAN அடுத்தபடியாக இந்த ஹோஸ்டிங் திட்டதை தேர்வு செய்யும் போது இது சில கூடுதல் அம்சங்களுடன் வருகிறது.
ஆனால் நீங்கள் அதிகபட்சம் 5 வலைத்தளங்களை இதில் ஹோஸ்ட் செய்து கொள்ளமுடியும் .
ஒரு மாதத்திற்கு உங்கள் வலைத்தளத்திற்கு 100,000 வரை பார்வையாளர்கள் வருவதற்கு இத்திட்டம் அனுமதிக்கின்றது.
மேலும் இந்த திட்டம் உங்கள் வலைத்தளத்திற்கு 20 ஜிபி சேமிப்பு இடம் மற்றும் 200 ஜிபி Bandwidth,இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் மற்றும் 24/7 தொலைபேசி ஆதரவையும் வழங்குகிறது.
WP Engine ஹோஸ்டிங் SCALE PLAN($193 ஒரு மாதத்திற்கு)
இந்த திட்டம் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மேல்கூறிய STRARTUP மற்றும் GROWTH திட்டங்களை விட அதிக Capacity மற்றும் வலைத்தள limits களை வழங்குகிறது.
நீங்கள் 30 வலைத்தளங்களை இங்கு ஹோஸ்ட் செய்து கொள்ளலாம் .
இது விலையுயர்ந்த திட்டம் போல நிறைய கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது.
மேலும் உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு மாதத்திற்கு 400,000 வரை பார்வையாளர்கள் வருவதற்கு அனுமதிக்கின்றது.
30 ஜிபி சேமிப்பு இடம் மற்றும் 400 ஜிபி Bandwidth ஆகியவற்றை வழங்குகிறது.
WP Engine ஹோஸ்டிங் CUSTOM PLAN
மேலே கூறின மூன்று திட்டங்களும் உங்கள் வலைத்தளத்திற்கு தேவையான ஹோஸ்டிங் சேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால், நீங்கள் இந்த CUSTOM திட்டதை தேர்வு செய்யவும் .
நீங்கள் இந்த CUSTOM திட்டத்தில் அதிகபட்சம் 30 வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்து கொள்ள முடியும்
உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் வருவதற்கு அனுமதி வழங்குகின்றது.
மேலும் 1 TB சேமிப்பிடம் மற்றும் 400+ GB Bandwidth ஆகியவற்றை வழங்குகின்றது.
வாடிக்கையாளர் ஆதரவு
Wp Engine Live Chat வழியாக 24/7 மணி நேர ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
WPEngine ஏப்ரல் 2016 இல் வாடிக்கையாளர் ஆதரவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அது என்னவென்றால் வாடிக்கையாளர் ஆதரவை கையாளும் முறையை முற்றிலும் மாற்றியது.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அவர்களுடைய கோரிக்கைகளை இப்போது தொலைபேசி அழைப்பு அல்லது டிக்கெட்டை ஆதரவை விட Live Chat ஆதரவை விரும்புகிறார்கள் .
அதனால் Wp Engine Live Chat வழியாக 24/7 மணி நேர ஆதரவு வழங்குகின்றது.
மேலும் Live Chat மூலமாக உங்கள் சிக்கலைக் நீங்கள் கையாள முடியாவிட்டால் உங்களுக்காக ஒரு டிக்கெட் வழங்கி அதன் மூலம் ஆதரவு தருகின்றது
24/7 மணி நேர Live Chat அனைத்து Wp Engine ஹோஸ்டிங் திட்டங்களிலும் அளிக்கப்படுகின்றது .
Growth மற்றும் Scale திட்டங்களுக்கு 24/7 தொலைபேசி ஆதரவு கிடைக்கிறது, மேலும் Startup திட்டங்களுக்கு 24/7 டிக்கெட் ஆதரவு கிடைக்கிறது.
வலைத்தள இயக்க நேரம்
உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் எப்போது வருவார்கள் என்று யூகிக்கமுடியாது.
ஏனென்றால் அவர்களுக்கு ஒரு விஷயம் தேவைப்படும்போது தான் வருவார்கள்.
எனவே உங்கள் வலைத்தளம் ஹோஸ்ட் செய்யப்பட்ட Server எப்போதும் Down Time இல்லாமல் Uptime இல் செயல்பட வேண்டும்.
அப்போதுதான் உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் வரும் போது ஆன்லைனில் உங்கள் வலைத்தளம் இருக்கும்.
Downtime இல் செயல்பட்டால் உங்கள் வலைத்தளம் இல்லை என்று நினைத்து அதற்கு பதிலாக உங்கள் போட்டியாளரின் வலைத்தளத்திற்கு சென்று விடுவார்கள்.
எனவே நீங்கள் ஒரு ஹோஸ்டிங் சேவையே வாங்க போகும் முன்பு அது வழங்கக்கூடிய இயக்க நேர உத்திரவாதத்தை பார்க்க வேண்டும்.
இதனால், உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை இழப்பீர்கள்.
WPEngine உங்கள் வலைத்தளத்திற்கு 99.99% இயக்க நேர உத்தரவாதத்தை அளிக்கிறது.
உங்கள் வலைத்தள இயக்க நேரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், WpEngine தொழில்நுட்ப ஆதரவு குழு அவற்றை மிகக் குறுகிய காலத்தில் சரிசெய்யது தருகின்றது.
WPEngine Loading Time
ஒரு புது ஹோஸ்டிங் நிறுவனங்களில் உங்கள் வலைத்தளத்திக்கான ஹோஸ்டிங் சேவையே நீங்கள் வாங்கும் முன்பு அவற்றின் Server Speed ,வாடிக்கையாளர் ஆதரவு எப்படி கவனித்து பார்த்து வாங்குகிறீர்களோ அது எவ்வளவு வேகமாக Page Loading செய்து தருகின்றது என்பதை பார்க்க வேண்டும்.
உங்கள் வலைத்தளத்திக்கு அதிகமாக பார்வையாளர்கள் வரும் போது அவர்கள் பார்க்க விரும்பும் Page களை உடனே Load செய்து தரவேண்டும் ,அப்போதுதான் பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளத்தில்
அதிக நேரம் இருப்பார்கள் .
இல்லையெனில் உங்கள் வலைத்தளத்தில் இருந்து உங்கள் போட்டியாளர்களின் வலைத்தளத்திற்கு சென்றுவிடுவார்கள்.
உங்கள் வலைத்தளத்தில் உள்ள Page களை 200 மீட்டரை விட வேகமாக Loading செய்து தர வேண்டும் என்று Google பரிந்துரைக்கிறது.
WP Engine உங்கள் வலைத்தளத்திற்கு Page Loading வேகத்தை சராசரியாக 331 எம்.எஸ் வழங்குகின்றது .
இதை மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்தது.
WP Engine ஹோஸ்டிங் நன்மைகள்
WP Engine ஹோஸ்டிங் சேவையே உங்கள் வலைத்தளத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெறுகிறீர்கள் .
WP Engine தங்கள் ஹோஸ்டிங் திட்டங்களை குறிப்பாக வேர்ட்பிரஸ் பயனர்களுக்குத் உதவுமாறு வடிவமைத்துள்ளனர் , ஏனென்றால் இது வேர்ட்பிரஸ் வலைத்தளங்களுக்கு மிகவும் பொருத்தமான ஹோஸ்டிங் அம்சங்களை வழங்குகின்றது.
Managed ஹோஸ்டிங் சேவையே மட்டுமே இது வழங்குகின்றது .
அதனால் உங்கள் வலைத்தளத்தை WP Engine ஹோஸ்டிங்கில் ஹோஸ்ட் செய்யும்போது உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த இயக்கநேரம்,Page Loading Speed, Security , ஆகியவற்றை வழங்குகின்றது.
தொழில்நுட்ப வணிக வலைத்தளத்திற்கு இந்த WP Engine சேவை நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கின்றது
WP Engine ஹோஸ்டிங் தீமைகள்
WP Engine ஹோஸ்டிங் சேவைகளில் முக்கிய நன்மைகளில் ஒன்றாக இருப்பது தான் இதன் தீமையாக இருக்கின்றது.
நீங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கு மட்டுமே இது சிறந்ததாக இருக்கும் .
கூடுதலாக, பாதுகாப்பு என்ற பெயரில் WP Engine எடுக்கும் சில முடிவுகள் அதிக அனுபவமுள்ள டெவலப்பர்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றது.
WP Engine Vs Bluehost
Bluehost பல திட்டங்களை வழங்குகிறது, அதுபோலவே மூன்று Managed வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றது அவை Build, Grow, மற்றும் Scale.
ஒட்டுமொத்தமாக,Bluehost இந்த திட்டங்கள் அனைத்தயும் குறைவான விலையில் வழங்குகின்றது மற்றும் WP Engine இல் நீங்கள் காணாத பல அம்சங்களை Bluehost வழங்குகின்றது.
எடுத்துக்காட்டாக, அன்லிமிடெட் வலைத்தளங்கள் மற்றும் அன்லிமிடெட் வலைத்தள போக்குவரத்து ,அன்லிமிடெட் டொமைன் மற்றும் Sub டொமைன்களை நீங்கள் ஹோஸ்ட் செய்யலாம்.
Bluehost இன் அனைத்து திட்டங்களிலும் ஜெட் பேக் தள பகுப்பாய்வு, 100 இலவச பிரீமியம் Themes , தினசரி Backup , malware மற்றும் டொமைன் தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகின்றது .
மேலும் குறிப்பாக E -Commerce வலைத்தளத்திற்கு அதிக ஆதரவை வழங்குகின்றது
இருப்பினும், ப்ளூஹோஸ்ட் பல குறைந்த ஹோஸ்டிங் விலையில் பல வேர்ட்பிரஸ் பயனர்களை ஈர்க்கிறது.
Conclusion
WP Engine வழங்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் விலை குறைவானவை அல்ல.
இவர்கள் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போல விலை நிர்ணயத்தில் எந்தஒரு ஒளிவுமறைவு இல்லாமல் உண்மையான விலையே -கூறுகிறார்கள்.
இருப்பினும், நீங்கள் செலுத்தக்கூடிய பணத்திற்கு ஈடாக தரமான Managed ஹோஸ்டிங் சேவையைப் பெறுவீர்கள்.
இந்த WP Engine பல முக்கியமான குறிப்பிட்ட வேர்ட்பிரஸ் அம்சங்கள்களை வழங்குகின்றது .
மேலும் உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த இயக்க நேரம் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது.
எனவே உங்கள் பட்ஜெட்டுக்கு WP Engine வழங்கக்கூடிய சேவை சரி என்றால் நீங்கள் இதை தேர்வு செய்ய நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.
அப்படி இல்லையென்றால், மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழங்கக்கூடிய சேவைகளை உங்கள் பட்ஜெட்க்கு ஏற்ப தேர்வு செய்யவும்.